ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா .
மாநிற தோற்றத்துடன் நல்ல பருமனான உடல் அமைப்புடன் இருந்த ரோஜாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தார்கள்.
நடிகை ரோஜா:
இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
1991 முதல் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் வரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வந்தார்.
1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் நடிகை ரோஜா .
இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் பிரசாந்த் நடித்திருப்பார். தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீரா ,எங்கிருந்தோ வந்தால் ,ராஜமுத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரோஜாவின் தமிழ் திரைப்படங்கள்:
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், காதல் கவிதை ,சின்ன ராசா, நெஞ்சிலே, சுயம்வரம், சொன்னால்தான் காதலா, வீட்டோட மாப்பிள்ளை, கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார் .
நடிகை ரோஜா பிரபல இயக்குனரான ஆர் கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இருக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென மார்க்கெட் குறைந்து போக பின்னர் சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்தார்.
அதை அடுத்து அரசியலில் தலை காட்ட ஆரம்பித்து மும்முரமாக அதில் ஈடுபட்டு வருகிறார். சிறந்த நடிகைக்காக தமிழக திரைப்பட அரசு , விருது நந்தி விருது, உள்ளிட்டவை பெற்று பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.
தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
51 வயசுல இளம் நடிகைக்கே டஃப் கொடுக்கும் ரோஜா:
அவ்வப்போது தனது குடும்பம் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் வீடியோ உள்ளிட்டவை இணையத்தில் வெளியிடுவார் .
இந்த நிலையில் தற்போது டைட்டான பிங்க் கலர் பேண்ட் அணிந்து கொண்டு டி-ஷர்ட் போட்டு கொண்டு. வீட்டில் ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தீயாய் பரவி வருகிறது. 51 வயதாகும் நடிகை ரோஜா இளம் நடிகைகளின் மிஞ்சும் அளவுக்கு ஒர்க்கவுட் செய்யும் இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போய் விட்டார்கள்.