நடிகை ரூபாஸ்ரீக்கு நடந்த பயங்கரம்.. ஹோட்டல் அறையில் கண்ட இடத்துல கைய வச்சி.. ஷகீலா பகீர்..!

ஷகீலா : கேரளா சினிமா துறையை உலுக்கிக் கொண்டிருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை. இந்த அறிக்கை என் மேல் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தை கூண்டோடு கலைந்து விட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் கேரளாவின் முன்னணி நடிகர்கள். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகை ஷகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பேசி இருக்கிறார். இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை அதிகாரப்பூர்வமாக பேப்பரில் எழுதி கையெழுத்து வாங்கி செய்கிறார்கள். ஒருவேளை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கே அட்ஜஸ்ட் செய்ய மறந்துவிட்டால் இந்த அக்ரீமெண்ட் காட்டி பயமுறுத்துவார்கள்.

இந்த அளவுக்கு சினிமாவில் நடிகைகள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. நான் இதை சொல்லலாமா..? வேண்டாமா..? என்று தெரியவில்லை. ரூபா ஸ்ரீ என்ற ஒரு நடிகை உங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த நடிகை இளம் வயதில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தில் ரூபாஸ்ரீ தான் ஹீரோயின். ஹோட்டலில் நான்கு பேர் அதீத மதுபோதையில் வந்து அவருடைய அறையின் கதவை தட்டி ரகளை செய்தனர். வெளிய வாடி.. அது.. இது,.. என கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் நான், என் தம்பி, என்னுடைய மேக்கப் மேன் அனைவரும் என்ன சத்தம் என்று வெளியே சென்று பார்த்தபோது ரூபாஸ்ரீயின்ன் அறையின் கதவை தட்டிக் கொண்டிருந்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள்..? என்று நான் கேட்டதற்கு என் மேல் கை வைத்து தள்ளி விட்டனர்.

தொடக்கூடாத இடத்தில் தொட்டு என் கையை பிடித்து தள்ளினார்கள். அவர்கள் போதையில் என்ன செய்வது என்ற நிலையில் இல்லாமல் இருந்தார்கள். ஒரு வழியாக அவர்களை திட்டி அங்கிருந்து அனுப்பி படக்குழுவில் இருந்த சீனியர் ஒருவரை அழைத்து நடிகை ரூபாஸ்ரீயை அதிகாலை 4 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த அளவுக்கு கொடுமைகள் எல்லாம் நடக்கும். இதை விட மோசமான விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. அவையெல்லாம் காலம் வரும் போது நான் கூறுவேன். ஏனென்றால் நான் இனிமேல் தான் பட வாய்ப்பு பெற்று ஒரு தயாரிப்பாளர் தயவில் வாழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நிறைய நடிகைகள் குறிப்பிட்ட தயாரிப்பாளர் குறிப்பிட்ட நடிகர்களை சார்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அந்த சூழ்நிலை கிடையாது. இன்னும் பல்வேறு பூதாகரமான தகவல்களை எல்லாம் வெளிவரும்.

என்னை கேட்டால் கேரளாவில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி போல தமிழ்நாட்டிலும் அமைக்க வேண்டும். கேரளாவை விட தமிழ் சினிமாவில் இன்னும் மோசமான விஷயங்கள் நடக்கிறது என குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் நடிகை ஷகிலா. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version