இதைத்தான் எதிர்பார்த்தோம்.. தீயாய் பரவும் சமந்தா-வின் போட்டோஸ்..! – குவியும் லைக்குகள்..!

நடிகை சமந்தா; தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர்  சமந்தா. சமீபத்தில் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், மனவலிமை இழக்காமல் நோய்தன்மை பற்றி அதிகம் கவலைப்படாமல், தனது மன உறுதியால், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது, ரசிகர்களுக்கு ‘டிவீட்’ வாயிலாக பேசும் சமந்தா, தனது உடல் நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

அத்துடன், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து எப்படியும் விரைவில் மீண்டு வந்து விடுவேன், பழையபடி சினிமா உலகில் எனது பயணம் வெற்றிக்கரமாக இருக்கும் என்றும், மன வலிமையுடன் கூறி வருவது, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அவர் நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே, தீவிர உடற்பயிற்சியில் நடிகை சமந்தா ஈடுபட்டு வருகிறார். அதுபற்றிய புகைப்படங்கள், தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடற்பயிற்சி கூடத்தில், பல்வேறு விதமான உடல்வலிமை சேர்க்கும் கடுமையான பயிற்சிகளில் மனம் சோராமல், அவர் ஈடுபட்டு வருவதை, அந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

சமீபத்தில், இவர் திண்டுக்கல் மாவட்டம், பழனிமலை முருகன் கோவிலில், நடந்தே படிகள் ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …