சோபிதாவால் மீண்டும் நாகசைதன்யா குடும்பத்தில் சேர்ந்த நடிகை சமந்தா..!

ஆந்திராவை சேர்ந்தவரான நடிகை சோபிதா தூலிபாலா சினிமா துறையில் நடிகையாக வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கினார்.

மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் பணியாற்றி வந்த இவர் முன்னதாக 2013 ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றார்.

நடிகை சோபிதா தூலிபாலா:

அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த “ராமன் ராகவ்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தின் மூலம் சோபித்த துலிபாலா அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அடுத்தடுத்து திரைப்படவாய்ப்புகள் கிடைத்தது .

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் “மேட் இன் ஹெவன்” என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸானார்.

சோபிதா தூலிபாலவின் குடும்பம்:

இவரது குடும்பம் என எடுத்துக் கொண்டால் ஆந்திர பிரதேசத்தின் தெனாலி நகரத்தில் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவரான சோபிதா பின்னர் விசாகப்பட்டினத்திற்கு குடிப்பெயர்ந்து அங்கேயே வளர்ந்தார்.

இவர் திரைப்பட தொழிலை தொடர மும்பைக்கு சென்றிருந்தார். அதன் மூலம் அங்கு மும்பையில் மாடல் அழகியாக தனது கெரியதை தொடங்கினார்.

பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் முறையாக பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்று பாரம்பரிய நடன கலைஞராகவும் இருந்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படம் கொடுத்த அடையாளம்:

இதனிடையே இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இந்த படம் அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில் தான் பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைத்தன்யாவுடன் டேட்டிங் செய்து வந்தார்.

ரகசியமாக வைத்திருந்த அவர்களது காதல் நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் நாக சைதன்யாவின் வீட்டிலேயே திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

நாக சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம்:

இரு வீட்டாரின் உறவினர்களின் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் சோபிதாவால் மீண்டும் நாக சைதன்யா குடும்பத்தில் நடிகை சமந்தா இணைத்திருக்கிறார் என்ற ஒரு பேச்சு அடிபட்டு பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது.

அது குறித்து விளக்கமான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம். அதாவது, நாக சைதன்யாவின் வருங்கால மனைவியான சோபிதா துலிபாலாவின் தங்கை பெயரும் சமந்தா தானாம்.

நாக சைதன்யா குடும்பத்தில் மீண்டும் இணைந்தார் சமந்தா:

சமந்தா என்ற அவரது சகோதரி ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இவரை வைத்து தான் நவார்ஜுனா குடும்பத்தில் சமந்தா என்ற பெயர் இனி எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கும் என்ற ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதையடுத்து சமந்தாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version