என் திருமண வாழ்க்கையில் நான் இப்படித்தான் இருந்தேன்.. ஆனால்.. விவாகரத்து குறித்து சமந்தா..!

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் முக்கியமானவர். சென்னையை சேர்ந்த சமந்தா தன்னுடைய கல்லூரி படிப்பிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சித்து வந்தார்.

2019இல் பானா காத்தாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் அதர்வா கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

ஆரம்பத்தில் சமந்தா நடித்த திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை என்றாலும் அதற்குப் பிறகு அவர் நடித்த நான் ஈ திரைப்படம் அவருக்கு பெரிய  வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ச்சி:

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நீதானே என் பொன்வசந்தம் போன்ற வெற்றி படங்களாக நடித்து வந்தார் சமந்தா. சினிமா வாழ்க்கையில் நடிகைகள் நடிகர்களை காதலிப்பது இயல்பான விஷயமாகும். ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த சமந்தா பிறகு அவரை விட்டுப் பிரிந்து நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணமும் அவருக்கு சுமூகமானதாக அமையவில்லை. திருமணமாகி சில வருடங்களிலேயே அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சமந்தா விவாகரத்து செய்து கொண்டார்.

வாழ்க்கையில் வந்த பிரச்சனை:

அதன் பிறகும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அடுத்ததாக உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் சமந்தா. அவருக்கு ஏற்பட்ட மையோசிட்டிஸ் என்னும் நோயின் காரணமாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படியும் அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா சாகுந்தலம் குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் சாகுந்தலம் திரைப்படம் அவருக்கு பெரிய தோல்வியாக அமைந்தது. சொல்ல போனால் சமந்தாவின் சினிமா வாழ்க்கையிலேயே பெரிய தோல்வி என்றால் அது சாகுந்தலம் திரைப்படம்தான் என கூறப்படுகிறது.

நோய் பிரச்சனை:

அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு மையோசிட்டிஸ் நோய் தீவிரம் அடையவே தற்சமயம் முழுமையாக சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார் சமந்தா. தொடர்ந்து பல நாடுகளுக்கு சென்று போட்டோக்களை வெளியிட்டு வந்த சமந்தா திரும்பவும் சினிமாவிற்கு வர இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே ஒரு பேட்டியில் பேசிய சமந்தா புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆடுவதற்கு வாய்ப்பு வந்த பொழுது நான் விவாகரத்தை எடுப்பதற்கான முடிவில்தான் இருந்தேன்.

அப்பொழுது என்னுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் விவாகரத்து வாங்க போகும் இந்த நேரத்தில் நீ அந்த பாடலில் ஆட வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அதையும் மீறிதான் நான் அந்த பாடலில் ஆடினேன் பிறகு அந்த பாடல்தான் எனக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்று கூறி இருக்கிறார் சமந்தா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version