எப்படி சினிமாவில் நடிகைகள் முக்கியமானவர்களாக இருக்கிறார்களோ அதே போல சீரியல்களில் உள்ள நடிகைகளும் பொதுமக்கள் மத்தியில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் சீரியல்களில் பிரபலமாகும் நடிகைகளுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.
ஏனெனில் நடிகைகளை பொறுத்த வரை திரைப்படங்கள் வெளியாகும் பொழுது தான் நடிகைகளை திரைப்படங்களில் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் சீரியல் நடிகைகளை பொறுத்தவரை அவர்களை தினசரி மக்கள் பார்த்து வருவதால் அவர்களுடன் எளிதாக ஒரு உறவை உருவாக்கி கொள்கின்றனர் பார்வையாளர்கள்.
பாக்ககூடாத பாத்தா மாதிரி
இதனாலேயே பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வரும் சீரியல் நடிகைகளுக்கு கூட சீரியலில் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் சினிமாவில் அப்படியான வாய்ப்புகள் கிடைக்காது. இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில் பெரும் சீரியல் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சந்தியா.
நடிகை சந்தியா நிறைய தமிழ் சீரியல்களில் வரிசையாக நடித்து வந்த நடிகையாக இருந்தார். ஆனால் அவருக்கு நடந்த ஒரு அசம்பாவிதத்தின் காரணமாக அதற்குப் பிறகு சினிமா மற்றும் சின்ன திரையை விட்டு சென்று விட்டார் சந்தியா.
நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அதை பண்ணான்
சந்தியா ஆரம்பத்தில் தங்கம் வள்ளி மாதிரியான சீரியல்களில் நடித்த பொழுது அதிக வரவேற்பு அவருக்கு இருந்தது. முக்கியமாக சன் டிவியில் அவர் நடித்து ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்கிற நாடகம் வெகுவான மக்களிடம் வரவேற்பை பெற்றது.
வாடகை தாய் முறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த சீரியலுக்கு அப்பொழுது நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் தனது திருமண விஷயங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சந்தியா.
அதிரவைக்கும் தகவல்
அதில் அவர் கூறும் பொழுது என்னை ஒரு நபர் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. நானும் அவரை முழுதாக நம்பினேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய செய்கைகள் தவறாக இருந்தது திருமணத்திற்கு முன்பே எனது மொபைலை எடுத்து அதில் நான் யாருடன் பேசி இருக்கிறேன் என்பதை எல்லாம் பார்ப்பதை வழக்கமாக அவர் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் இன்ஸ்டாகிராமில் என்னுடைய ரசிகர் ஒருவர் எனக்கு நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜை பார்த்த என்னை கட்டிக் கொள்ளப் போகும் அந்த நபர் நான் ஏதோ கொலை குற்றம் செய்த மாதிரியும் என் மீது தவறு இருப்பது போலவும் என்னை பார்த்தார்.
பொதுவாக சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இந்த மாதிரியான மெசேஜ்கள் வருவது சாதாரண விஷயம் தான் என்றாலும் அதை கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அதற்கு பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார் சந்தியா.