ஆடைக்குள் கை விட்டு என் மார்பகத்தை பிடித்து.. அதை செய்தான்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை..!

சன் டிவி சீரியல் மூலமாக பல நடிகைகள் பிரபலமடைந்து இருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் சன் டிவி சீரியலில் நடித்ததன் மூலமாகவே இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவராக நடிகை சந்தியா இருந்து வந்தார்.

நடிகை சந்தியா வெகு காலங்களாகவே சீரியல் துறையில் இருந்து வருகிறார் அதற்கு முன்பிருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். சினிமா துறையில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்துதான் அவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் பலரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவது கிடையாது. ஏனெனில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடிப்பதற்குதான் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வம்சம் சீரியலில் வாய்ப்பு:

அந்த வகையில் சந்தியாவிற்கு சின்னத்திரை வாய்ப்பு என்பது மக்கள் மத்தியில் அவரை பிரபலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதனை தொடர்ந்து அப்பொழுது ரம்யா கிருஷ்ணன் நடித்து சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வம்சம் சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகவும் கெத்தான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்ததால் அந்த சீரியலுக்கு அப்பொழுது அதிக வரவேற்பு இருந்தது. அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு முக்கியமான ஒரு கதாபாத்திரமாக சந்தியாவின் கதாபாத்திரம் இருந்தது.

அதிலேயே அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு சன் டிவியில் பல வருடங்கள் ஓடி சாதனை படைத்த சந்திரலேகா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சந்தியா.

சந்திரலேகா சீரியல் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை அவருக்கு பெற்று கொடுத்தது. இதற்கு நடுவே அத்திப்பூக்கள் என்கிற சீரியலிலும் நடித்திருந்தார் சந்தியா. அந்த சீரியலில் வாடகை தாயாக ஒருவர் படும் கஷ்டங்களை வெளிப்படுத்து வகையிலான கதை அந்த சீரியலில் இருந்தது.

படப்பிடிப்பில் நடந்த சம்பவம்:

அந்த சீரியல் முடிவடையும் வரையுமே அதற்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை சந்தியா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும்போது ஒரு படபிடிப்பிற்காக ஒரு முறை கும்பகோணத்திற்கு சென்று இருந்தேன். அப்பொழுது  யானை என்னை ஆசீர்வாதம் செய்வது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த காட்சி எடுக்கப்படும் பொழுது அந்த யானைக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால் திடீரென்று அது என்னை தாக்கிவிட்டது.

அது என்னை தாக்கியதில் என்னுடைய உடலில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் வலி தாங்காமல் நான் மயங்கி விட்டேன் அப்பொழுது அங்கு இருந்த பலரும் சேர்ந்துதான் என்னை தூக்கி சென்றனர் அப்பொழுது ஒரு நபர் என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தார்.

அதை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத விஷயம் அப்படி ஒரு நிலையில் நான் இருக்கும் பொழுது கூட என்னை தவறாக தொட்ட அந்த நபரை நினைத்து எனக்கு இப்பொழுதும் கோபம் வருகிறது என்று தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார் சந்தியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version