ஊருக்கு தான் நல்லவர்.. ஆனா.. வீட்ல.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சங்கீதா..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சங்கீதா 90ஸ் காலகட்டத்தின் இடைப்பகுதியில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆகி வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

நடிகை சங்கீதா:

இவரது தாத்தா கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தார். இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

இப்படி திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வந்த சங்கீதா கிரிஷுக்கு திரைப்பட வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைத்தது.

ஆனால், அதை தன்னுடைய திறமையால் தக்க வைத்துக் கொண்டார். திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி சங்கீதா பரதநாட்டிய கலைஞராக முறையாக பரதநாட்டியத்தை பயின்று இருக்கிறார்.

90ஸ் காலகட்டத்தின் கடைசியில் தனது நடிப்புத் தொழிலை துவங்கி தொடர்ச்சியாக சில பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனதை கவர்ந்தார்.

குறிப்பாக விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான பிதாமகன் திரைப்படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

பிதாமகன் படம் கொடுத்த அடையாளம்:

இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சங்கீதா இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் நடித்த பிதாமகன் திரைப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடுத்தக்கது. மேலும் மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படமும் ஒரு அளவுக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. உயிர் ,தனம் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சங்கீதா.

திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

நடிகை சங்கீதா கிரிஷ் சிவகார்த்திகேயன் நடன திறமைக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சங்கீதா பிரபல பின்னணி பாடகரான கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் நடிகை சங்கீதா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் நடிக்க தான் அதிகம் பிடிக்கும். ஏனென்றால் இங்கு எனக்கு மரியாதை கொடுப்பதில்லை.

அங்கு நல்ல மரியாதை நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள் என வெளிப்படையாக கூறியிருந்தது சர்ச்சைக்கு உள்ளாகியது.

ஊருக்கு தான் நல்லவர் ஆனால் வீட்ல…

இந்த நிலையில் தற்போது மற்றொரு பேட்டியில் சங்கீதா தனது கணவர் க்ரிஷ் குறித்து பேசி இருக்கிறார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கிரிஷ்க்கு நான் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை அளித்தேன்.

அப்போது அவர் மிக அழகாக இருந்ததை பார்த்து இவர் யார் என்று நான் ஜீவாவிடம் கேட்டேன். அந்த சமயம் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலை வீட்டில் நடந்து கொண்டிருந்தது.

கிரிஷை பார்த்த உடனே வீட்டில் போய் எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டும் சொன்னேன். அதன் பின் அவரிடம் உங்களுக்கு வயது என்ன என்று கேட்டேன் .

கிரிஷ் வயது 30 என்னுடைய வயது 28 ஆனால் மக்கள் எல்லோரும் க்ரிஷ் சின்ன பையன் நான் தான் வயசுல மூத்த பொண்ணு அப்படின்னு நெனச்சிட்டு இருக்காங்க.

ஆனால், அது உண்மையே இல்லை. அவர் பாக்குறதுக்கு ரொம்ப இளமையா இருப்பாரு. இதனிடையே எங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருஷத்திலேயே சண்ட அதிகமாயிடுச்சு.

சினிமா பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. அதனால் அதை வச்சு எங்களுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை வந்துச்சு.

ஊருக்கு தான் நல்லவரா இருப்பாரு ஆனால் வீட்ல அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று தனது கணவரை பற்றி சங்கீதா அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version