“குடி போதையில் கூட பொறந்த அண்ணனே.. என்னுடைய..” நடிகை சங்கீதா கூறிய திடுக்கிடும் தகவல்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை சங்கீதா தனது அற்புத நடிப்பின் மூலம் ஹோலிவுட் ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர்.

பன்முகப் திறமையை கொண்டிருக்கும் நடிகை சங்கீதா மிகச்சிறந்த பின்னணி பாடகி என்பது பலருக்கும் தெரியாது. இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை இவருக்கு தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் மிகச் சிறப்பான முறையில் ரீச் ஆனார்.

நடிகை சங்கீதா..

தமிழ் திரை படங்களை பொருத்த வரை நடிகை சங்கீதா நடிப்பில் வெளி வந்த உயிர், பிதாமகன், தனம் போன்ற படங்கள் அவருக்கு முகவரியோடு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

குறிப்பாக பிதாமகன் திரைப்படத்தில் யாரும் செய்ய விரும்பாத கேரக்டர் ரோலில் இவர் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதையும் படிங்க: அடிக்கிற வெயிலில் சுனைனா செய்த வேலையை பாருங்க உறைஞ்சு போயிடுவீங்க..?

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசனில் நடுவராக பணியாற்றிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராக விளங்குகிறார்.

மேலும் தற்போது முன்னணி நடிகராக திகழும் சிவ கார்த்திகேயனுக்கு நடனத்தை கற்றுக் கொடுத்த வகையில் சிவ கார்த்திகேயனின் நடன திறமைக்கு இவரும் ஒரு காரணம் என்று கூறலாம்.

குடிபோதையில் அண்ணன்..

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் தனது குடும்ப நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியதோடு திரைப்படங்களில் இவர் நடிக்கும் போது சம்பாதித்த பணத்தினை அவரது கூட பிறந்த சகோதரன் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நாசம் செய்து அழித்து விட்டதாக கூறியிருக்கிறார்.

அத்தோடு தான் சிரமப்பட்டு சம்பாதித்த பணம் முழுவதுமே குடும்பத்தார்கள் எடுத்துக் கொண்டதோடு அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த விதமான சேமிப்பையும் செய்யாமல் பணத்தை செலவு செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவு ஏன் தன்னை பெற்ற அம்மா கூட என்னுடைய பணத்தை அனுமதியில்லாமல் எடுத்துச் செலவு செய்வார். குடி போதையில் அண்ணனுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்று கணக்கும் சுத்தமாக தெரியாது.

திடுக்கிடும் தகவலால் கிடுகிடுத்த இணையம்..

இப்படித்தான் நான் சம்பாதித்த பணம் முழுவதும் ஒரு காலகட்டத்தில் வீணாய் போனது என்று மனம் குமுறி கூறி இருக்கும் நடிகை சங்கீதா தான் கிருஷ்சை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்ததாக கூறியதோடு மேலும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் பேட்டியில் வருத்தத்தோடு பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

தற்போது சங்கீதா அளித்த இந்த பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி இப்படியெல்லாம் சொந்த சகோதரியின் பணத்தை வீணாக செலவு செய்து மன நிம்மதி இல்லாத வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த குடும்பத்தாரை நினைத்து சங்கீதாவின் சிரமத்தையும் எண்ணி அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.

மேலும் குடும்பத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும். பிரபலம் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய பெண்களின் நிலை என்ன? என்பதை ரசிகர்கள் பலரும் பேசி வருகிறார்கள்.

அத்தோடு சங்கீதாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி பலராலும் அதிக அளவு கேட்கப்படுகின்ற பேட்டிகளில் ஒன்றாக மாறிவிட்டது. இனியாவது இந்த அவலம் தொடராமல் இருக்க குடும்பத்தில் உள்ள நபர்கள் மதுவுக்கு அடிமையாகாமல் இருப்பது சிறப்பாக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version