தமிழில் 1990களின் இறுதிகளில் இருந்தே பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை சங்கீதா கிருஷ். சங்கீதா கிருஷை பொருத்தவரை அவருக்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
ஆனால் குறுகிய காலம் மட்டுமே அவர் நடிகையாக இருந்து வந்தார். அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையுமே முக்கியமானதாக இருக்கவில்லை. பெரும்பாலும் நடிகைகள் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. என்றால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும்.
நடிகை சங்கீதா
அப்படியாக சங்கீதா தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் தோல்வியை கண்ட பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது இல்லாமல் போனது. அதற்குப் பிறகு இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.
பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் மீண்டும் வாய்ப்புகளை பெற்றார் சங்கீதா. அதற்குப் பிறகு சிம்பு நடித்த காளை திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தபோது பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார் சங்கீதா.
என்ன அந்தாளு இப்படி பேசுறான்
பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டார். இல்லை என்றால் சினிமாவில் தொடர்ந்து நீடிப்பது கஷ்டம் என்பதை புரிந்து கொண்டார் சங்கீதா. அந்த வகையில் பிறகு அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.
அப்படியாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனுடன் சில படங்களில் அவர் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அப்படி அவர் நடித்த கபடி கபடி என்கிற ஒரு திரைப்படத்தில் இயக்குனர் பாண்டியராஜனுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
திட்டியதால் கடுப்பான நடிகை
அதில் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் என்னை எதிர்த்து பேசுவதற்கோ திட்டுவதற்கோ எந்த ஒரு இயக்குனருக்கும் தைரியம் வராது .அந்த அளவிற்கு நான் எல்லோரிடமும் சத்தம் போட்டு விடக்கூடிய ஆள். ஆனால் என்னையே திட்டும் ஒரு நபர் என்றால் அது இயக்குனர் பாண்டியராஜன் தான்.
படபிடிப்பு தளங்களில் எப்போதும் என்னை திட்டிக்கொண்டே இருப்பார் பாண்டியராஜன். இப்படித்தான் ஒரு முறை என்னை கழுதை கழுதை என திட்டிவிட்டார். எனக்கு அது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி விட்டது. நான் வேகமாக தயாரிப்பாளரிடம் சென்று என்ன இந்த ஆள் இப்படித்தான் பேசுவாரா? என்று சத்தம் போட்டு விட்டேன்.
ஆனாலும் இதையெல்லாம் தாண்டி பாண்டியராஜன் ஒரு நல்ல மனிதராகவார். என்னை சுற்றி இருந்த நிறைய நல்ல மனிதர்களில் பாண்டியராஜனும் ஒருவர் என்று கூறி இருக்கிறார் நடிகை சங்கீதா.