நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா..? சர்ச்சையான சங்கீதாவின் திமிர் பேச்சு..! விளாசும் பிரபலம்..!

மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி பிறகு அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சங்கீதா க்ரிஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகை ஆவார்.

மூன்று மொழிகளிலும் மிக அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் கொஞ்சம் முக்கியமான கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் தமிழில் 31 திரைப்படங்களிலும் தெலுங்கில் 26 திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சங்கீதா

ஆனால் இந்த மூன்று மொழிகளிலேயே இவர் எதில் அதிக பிரபலம் என்று கேட்டால் தமிழில்தான் என்று கூற வேண்டும். தெலுங்கை விடவும் தமிழில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசியிருக்கும் விஷயங்கள் கொஞ்சம் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன.

1990 இல் ரசிகா என்கிற பெயரில்தான் முதன்முதலாக பூஞ்சோலை என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை சங்கீதா. அதற்குப் பிறகு அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தொடர்ந்து அவருக்கு தோல்வியைதான் கொடுத்து வந்தது.

என்ன அவ்ளோ பெரிய ஆளா?

இந்த நிலையில் பெயரை மாற்றினால் தனக்கு வெற்றி படங்கள் கிடைக்கும் என்று நினைத்தார். அதன் பிறகு அவரது பெயரை சங்கீதா என்று மாற்றி வைத்தார். அதன் மூலமாக அவருக்கு அந்த பெயரே அடையாளமாக மாறியது.

நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த சங்கீதாவிற்கு தமிழில் பிதாமகன் முக்கியமான திரைப்படமாக இருந்தது. இவர் நடிக்க தெரியாத நடிகர்களிடம் கூட சிறப்பாக நடிப்பை வாங்கக் கூடியவர் இயக்குனர் பாலா. அதனால் அவரது திரைப்படத்தில் நடிக்கும் அனைவருக்குமே பெரிதாக வரவேற்புகள் கிடைத்துவிடும் .

விளாசும் பிரபலம்

ந்த வகையில் பிதாமகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சங்கீதா. அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் காளை மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில்தான் தன்னை மிகவும் மரியாதையாக நடத்துகிறார்கள் என்று பேசியிருந்தார் சங்கீதா.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய செய்யாறு பாலு கூறும் பொழுது தமிழ் சினிமா தான் சங்கீதாவிற்கு ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது. பிதாமகன் மாதிரியான ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றால் சங்கீதாவிற்கு இப்படியான ஒரு வரவேற்பும் அடையாளமும் கிடைத்திருக்காது.

ஆனால் நன்றி மறந்து தமிழ் சினிமாவையே தவறாக பேசுகிறார் தமிழ் சினிமாவில் என்ன கீழே உட்கார வைத்தா சோறு போட்டார்கள், என்று வெளிப்படையாக இதற்கு கண்டனம் தெரிவித்து பேசி இருக்கிறார் செய்யாறு பாலு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version