1998 இல் வெளியான காதல் கவிதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா நக். அதன் பிறகு நீ வருவாய் என திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் முதன் முதலாக நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியின் தோழியாக இவர் நடித்திருப்பார். காதல் திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வகையில் வரவேற்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு:
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அடையாளமாக அமைந்த மற்றொரு திரைப்படம் என்றால் பேராண்மை திரைப்படத்தை கூறலாம். பேராண்மை திரைப்படம் ஒரு க்ரைம் அட்வெஞ்சர் திரைப்படமாக இருந்தது. இதில் வரும் நான்கு மாணவிகளில் அஜிதா என்னும் மாணவியாக இவர் நடித்திருப்பார்.
saranya-nag-photos-3அதற்கு பிறகு அவருக்கு இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. இறுதியாக 2014 ஆம் ஆண்டு ரெட்டை வாலு, முயல் ஆகிய படங்களில் நடித்த சரண்யா அதற்கு பிறகு சினிமாவில் நடிக்கவே இல்லை. மொத்தமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய சரண்யா கூறும்போது தமிழ் சினிமாவில் அவருக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த இயக்குனர்:
சினிமாவை பொறுத்தவரை அதில் நடிக்கும் பெண்களை ஒழுக்கமாக பார்ப்பார்களா? என்பது சந்தேகம்தான். பேராண்மை படத்திற்கு பிறகு நான் சில படங்களில் நடித்தேன். தெலுங்கிலும் எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.
saranya-nagஅதற்கு பிறகு எனக்கு ஏற்பட்ட உடல்நல குறைப்பாட்டால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. நானும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் என ஓப்பனாக கூறுகிறார் சரண்யா நக்.
மேலும் அவர் கூறும்போது “வெளிப்படையாகவே இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற சொல் சினிமாவில் இருந்து வருகிறது. நடிகைகளை அவமானப்படுத்துவது எல்லாமே சினிமாவில் நடக்கும். நமக்கு யாரும் இல்லை என தெரிந்தால் நேரடியாகவே அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைப்பார்கள். அதையெல்லாம் தாண்டிதான் வந்திருக்கிறேன்.
படம் இயக்கி நன்றாக வரவேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் அப்படி கேட்க மாட்டார்கள். பெண்களை பயன்படுத்த நினைக்கும் இயக்குனர்கள்தான் அப்படி கேட்பார்கள். இப்போது எல்லாம் இப்படி கேட்டால் சமூக வலைத்தளம் இருப்பதால் போடா என தைரியமாக பேச முடியும்” எனக் கூறுகிறார் சரண்யா நக்.