நான் செஞ்சது ரொம்ப தப்புதான்! என்னடா இது புதுகதையா? – ஓபனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா..

தமிழ் திரை உலகில் 80 காலகட்டங்களில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்த நடிகை சீதா. இவரை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது வசீகரா அழகால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

நடிகை சீதா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்தவர்.

நடிகை சீதா..

தமிழ் திரை படத்தின் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்த நடிகை சீதா புதிய பாதை என்ற திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனோடு இணைந்து நடித்தது உங்களுக்கு நினைவில் எடுக்கலாம்.

அறிமுக இயக்குனராகவும் நடிகராகவும் இந்த படத்தை இயக்கி நடித்த பார்த்திபன் சீதாவை இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் இருவரும் நடிக்கும் போது காதல் ஏற்பட்டது.

மேலும் இவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தியதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து சீதா வீட்டில் சம்மதத்தை கேட்ட போது அவர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து வீட்டை விட்டு ஓடி வந்து இயக்குனர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

நான் செஞ்சது ரொம்ப தப்புதான்..

திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப பங்கினியாக மாறிய நடிகை சீதா சுமார் 10 ஆண்டுகள் பார்த்திபனோடு இணைந்து வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மாறினார்.

இந்நிலையை இவர்களை இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து பெற்று இயக்குனர் பார்த்திபனை விட்டு விலகி வாழ்ந்தார்.

 

அந்த சமயத்தில் சீரியல் நடிகர் சதீஸ் மீது கொண்ட காதலால் மீண்டும் அந்த சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ ஆரம்பித்த நடிகை சீதாவின் மண வாழ்க்கை நிலைத்து நிற்கவில்லை.

இதை அடுத்து இரண்டாவது திருமணமும் கசந்து போக அந்த சீரியல் நடிகரை விவாகரத்து செய்து விட்டு தற்போது தனித்து வசித்து வருகிறார்.

ஓபனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா..

இதைத் தொடர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை சீதா தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் நடிகை சீதா பேசும் போது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆண்டில் மூன்று திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த இவர் பார்த்திபனின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த பேட்டியில் பேசும் போது தான் தன்னுடைய அடையாளத்தை இழந்து விட்டதாக ஓப்பனாக கருத்தினை பதிவு செய்துவிட்டார். அப்படி அவசரப்பட்டு முடிவு எடுத்ததினால் அந்த வாழ்க்கை அந்த இடத்திலேயே முடிந்து விடுகிறது.

எனவே மீண்டும் அந்த அடையாளத்தை பெற வேண்டும் என்று நினைத்தாலும் அதற்காக பெரிய போராட்டங்களை நாம் செய்தும்  முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

இதில் சீதா சொல்ல வந்தது என்னவெனில் திருமணத்திற்கு முன்பு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் முடிந்த பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது தான் மிகப்பெரிய தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு திருமணத்திற்கு முன்பு பெண்களுக்கு இருக்கக்கூடிய இது போன்ற தனித் திறமைகளை கைவிடுவது தவறு என்பதை நாசுக்காக ஓபன் ஆக சொல்லிக் இருக்கிறார்.

எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்கள் தனக்கு உரிய தனித்தன்மையை அப்படியே விட்டு விடாமல் கடைசி வரை ஃபாலோ செய்து வெற்றிகள் பெற முயற்சி செய்வது தான் அவரது எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் என்ற கருத்துக்களையும் சிலர் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version