பார்த்திபன் லெவல் இது தான்.. அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இது தான்..! ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சீதா தனது நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர்.

பார்த்திபன் லெவல் இதுதான்..

இந்நிலையில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் பார்த்திபன் உடன் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு சீதாவின் வீட்டில் ஒப்புதல் கொடுக்காததை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களது மண வாழ்க்கையில் விரிசல் வர ஆரம்பித்ததை அடுத்து சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இதுதான்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் திருமணத்தில் பார்த்திபன் இடம் இருந்த எதிர்பார்ப்பு இதுதான் ஆனால் அதில் எனக்கு நிறைவேறவில்லை.

சுகாசினி படத்தில் சுகாசினி பாடும் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்ற ரீதியில் தான் எனக்கு பார்த்திபன் வேண்டும் என்று நினைத்தேன்.

அவருடைய புகழையும் பணத்தையோ நான் விரும்பி கல்யாணம் செய்து கொள்ளவில்லை .நானும் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியில் இருந்து வந்தவள் தான்.

அதைப் போல பார்த்திபனம் ஒரு மிடில் கிளாஸ் இருந்து வந்தவர் என்பதால் என்னுடைய முழு கவனமும் பார்த்திபனிடமிருந்து அன்பை பெற வேண்டும் என்று தான் இருந்தது.

ஓப்பனாக பேசிய நடிகை சீதா..

ஒரு கட்டத்தில் எனக்கு பார்த்திபன் இடம் இருந்து அந்த அன்பு கிடைக்காததால் தான் எங்களுக்குள் விரிசல் விழ ஆரம்பித்து. கடைசியில் பிரிவில் வந்து நின்றது என்று ஓப்பனாக பேசி இருக்கிறார்.

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு காசு பணத்தை எதிர்பார்த்து சீதா இல்லை. அவர் தன் கணவரிடம் இருந்து எதிர்பார்த்தது ஒரு சராசரி பெண் எதிர்பார்க்கும் அன்பையும், பாசத்தையும் தான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை அவர்கள் ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் சீதா பார்த்திபனின் மீது எந்த அளவு பாசம் வைத்திருக்கிறார் என்பது அவர் பேச்சு வெளிப்படுத்தி உள்ளது என்பதை சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியும் விட்டது.

அத்துடன் இன்று வரை பார்த்திபன் சீதாவின் பிரிவுக்கு காரணம் என்ன என்று தெரியாதவர்களுக்கு சீதாவின் பேச்சாளர் அவர்களின் பிரிவின் காரணம் குறித்த உண்மையை தெளிவுபட விளக்கி உள்ளது.

நடிகை சீதா மீண்டும் ஒருமுறை சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டு அவரது மன வாழ்க்கை சரியாக அமையாததை அடுத்து தற்போது தனிமையில் வசித்து வருகிறார்.

பார்த்திபனை மீண்டும் ஏற்றுக்கொள்ள ஆசைப்பட்ட போதும் பார்த்திபன் அதற்கு விரும்பவில்லை என்பது போன்ற விஷயங்கள் இணையத்தில் வெளிவந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version