பிரபல நடிகை ஷகிலா சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக படங்களில் நடித்த போது தான் எதிர் கொண்ட கஷ்டங்கள் மற்றும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்வார்கள் ஆனால் அங்கு சென்ற பிறகுதான் வேறொன்று நடக்கும் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இளமையாளத்தில் நடிகை ஷகிலாவின் படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களை விடவும் அதிக வசூல் பெற்று வந்தன நடிகை ஷகிலாவின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே இளசுகள் மத்தியில் ஒரு கொண்டாட்டமாக தான் இருக்கும். அப்படியான காலகட்டம் அது.
ஆனால் அந்த காலகட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் என்ன பணத்தை எப்படி சம்பாதிப்பது பணத்தை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்ற எந்த ஒரு யோசனையும் இல்லாமல் கால் போன போக்கில் போய் வந்திருக்கிறார் நடிகை ஷகிலா.
காலம் சென்ற பிறகு அவற்றை உணர்ந்து என்ன பலன்.. இந்நிலையில் தன்னுடைய இளமைக்கால ஏமாற்றங்கள் குறித்து தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
என்னுடைய முதல் படத்தில் இருந்து தற்போது வரை பட வாய்ப்புக்காக நான் யாரையும் தேடி சென்றது கிடையாது. யாருடைய காலையும் பிடித்து கிடையாது ஆனாலும் சினிமா வாய்ப்பு என்னை தேடி வந்தது.
அதனை நான் பயன்படுத்திக் கொண்டேன் ஆனால் என்னை பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதித்தவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள். தவிர நான் யாரையும் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நான் நிறைய ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். தூங்குவதற்கு கூட நேரம் கொடுக்க முடியாமல் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன்.
இளம் வயதில் ஒரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் அந்த ஒரு படத்தில் எடுத்த காட்சிகளை வைத்து நான்கு படம் ரிலீஸ் செய்வார்கள். இது எனக்கு பிடித்த ஏமாற்றமாக இருந்தது.
காரணம் என்னிடம் ஒரு கதை கூறி அந்த ஒரு கதையிலேயே நான்கு கதைகளுக்கு உண்டான காட்சிகளை படமாக்கி அதன் பிறகு அந்த காட்சிகளை நான்கு படங்களாக பிரித்து ஷகிலா நடிக்கும் என்று வேறு வேறு தலைப்பில் ரிலீஸ் செய்வார்கள்.
ஆனால் எனக்கு ஒரு படத்திற்கான சம்பளம் மட்டும் தான் கிடைக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் என்பதால் அவர்களிடம் இதை எப்படி கேட்பது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன்.
நான் கொஞ்சம் சாதுரியமாக செயல்பட்டு இருந்தால் என்னுடைய தற்போதைய பொருளாதாரம் பிரச்சனைகள் எல்லாம் இருந்திருக்காது. சினிமா வாய்ப்புக்காக இன்று படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் அப்படி எதுவும் எனக்கு நடந்தது கிடையாது. பட வாய்ப்பு வேண்டும் என்று நான் யார் கை காலையும் பிடித்தது கிடையாது. யாருடைய ஆசைக்கும் நான் கீழ்படியவில்லை. யாருக்கும் நான் இறையாகவில்லை என்று தன்னுடைய வாழ்க்கை பக்கங்களை புரட்டி இருக்கிறார் நடிகை ஷகீலா.
Summary in English : Actress Shakeela recently shared her experiences about the struggles she faced at the beginning of her acting career. She revealed how she worked hard to make a place for herself in an industry that was mainly dominated by male actors.