நானும் பொம்பள தானே.. அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக பேசிய ஷகீலா..!

மலையாள திரை உலகில் மாஸ் காட்டிய நடிகை ஷகீலா திரைப்படம் அடல்ட் ஓரியண்டட் திரைப்படமாக இருந்த காரணத்தால் இவரது திரைப்படம் வெளி வருகிறது என்றாலே மலையாளத்தில் முன்னாடி நடிகர்களாக இருந்த நடிகர்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள்.

அது மட்டுமல்லாமல் ஏராளமான ஆண் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை ஷகீலாவை சைக்லோன், லேடி லால் என்று அன்பாக அழைத்து வந்தார்கள்.

இதனை அடுத்து மலையாள திரை உலகம் இவருக்கு தடை விதித்ததை அடுத்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை ஷகீலா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் படங்களிலும் குணசித்திர வேடத்தையும் நகைச்சுவை வேடத்தையும் ஏற்று நடித்திருக்கிறார்.

எனினும் கவர்ச்சி நடிகையாக விட ஒரு படி மேலே சென்று அது மாதிரியான படங்களின் நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதை அடுத்து இவருக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவை அடுத்து இவரின் தாய்மை உணர்வை புரிந்து கொண்ட பலரும் இவரை அம்மா என்று பாசத்தோடு அழைத்தார்கள்.

அது மட்டுமல்லாமல் தனியார் youtube சேனல்களுக்கு அதிக அளவு பேட்டியை கொடுத்து வரும் நடிகை ஷகீலா அண்மை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

நானும் பொம்பள தான்.. 

அந்த வகையில் இவரிடம் திருமண ஆசை இல்லையா? ஏன் ஒருவரோடு நிலைத்து உங்களது திருமண பந்தம் பயணப்படவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நேர்த்தியான முறையில் பதில் அளித்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த நபர்கள் 10 ஆண்டுகள், மூன்றாண்டுகள், இரண்டு ஆண்டுகள் ஓராண்டு என சொற்பமான அளவில் தன்னோடு பயணித்து பிறகு வேண்டாம் என்று விலகி விட்டார்கள்.

இதற்கு காரணம் நான் என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் என் மண வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள்.

நானும் பொம்பள தான் எனக்கும் அது போன்ற ஆசைகள் இருக்கத் தான் செய்யுது. எனினும் என்னுடைய ஆசை இது வரை நிராசையாகவே மாறிவிட்டது.

எனக்கும் அந்த ஆசை இருக்கு..

இதற்குக் காரணம் நான் என் குடும்பத்தின் மீது எடுத்துக் கொண்ட அக்கறை என்பதோடு மட்டுமல்லாமல் என்னை அப்படிப்பட்ட ஒரு பெண்ணாகவே திருமணம் செய்து கொள்ள நினைத்தவர்கள் பார்த்தார்கள்.

அதனால் தான் எனக்கு திருமண பந்தம் அமையாமல் ஒரு தொடர் கதை போல் இரண்டு ஆண்டுகள் 10 ஆண்டுகள் என தொடர்ந்து முற்றுப்பெற்று விட்டது என ஓப்பனாக பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு நடிகை ஷகீலா ஒரு சாமானிய பெண் போல தன் குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை இழந்திருக்கிறார் என்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட நண்பர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நடிகை ஷகீலாவின் உயர்ந்த குணத்தை பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version