மோகன்லாலுக்கு நன்றி என்பதே இல்லை.. விளாசும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்..!

மலையாள திரை உலக நடிகர் மோகன்லால் என்றால் அறியாதவர்களை இல்லை. அந்த அளவு முன்னணி நடிகராக இருக்கும் இவரை பற்றி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் விவகாரமான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார்.

சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் தற்போது மோகன்லால் பற்றி பேசிய விஷயங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

நடிகை சாந்தி வில்லியம்ஸ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரது கணவர் வில்லியம் திரையுலகில் ஒரு பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர். அந்த காலத்தில் ஒளிப்பதிவு செய்ய பெரிய கிரேன் வசதி எல்லாம் இல்லாத சமயத்தில் கூட எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அதில் தலைகீழாக தொங்கி ஒளிப்பதிவு செய்வாராம்.

இதனால் சினிமா துறையில் இவரது ஒளிப்பதிவுக்கு என்று ஒரு தனி மரியாதையே இருந்துள்ளது. இந்நிலையில் இவரும் மற்றவர்களைப் போல சொந்தமாக திரைப்படங்களை உருவாக்கி அது தோல்வி அடைந்ததால் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு இறந்தவர்.

நன்றி இல்லாத மனுஷன் அப்பா..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் வில்லியம்ஸ் மனைவியான சாந்தி வில்லியம் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள் குறித்து ஓப்பனாக பேசி பலரையும் ஷாக்கில் தள்ளி இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் மம்மூட்டி குறித்து பேசும் போது மம்முட்டியை தனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் எல்லோரும் அவரை பிடிக்கும் என்று சொல்லுவார்கள். எனக்கு அவரைப் பார்த்தாலே கோபம் தான் வரும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

மம்முட்டியின் இரண்டாவது படத்தை எனது கணவர் தான் தயாரித்திருந்தார். அப்போது என்னுடைய வீட்டிற்கு மம்முட்டி எப்போதும் வருவார். என்னுடைய அம்மாவிடம் சேசி இன்னைக்கி மீன் உண்டா? என்று கேட்பார் அம்மாவும் வித விதமான மீன்களோடு அவருக்கு சாப்பாடு கொடுப்பார்.

இவரை விட ஒரு படி மேல மோகன்லால்.இவர் வீட்டில் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் பெரிய டிபன் கேரியர் கொண்டு வந்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வார்.

மோகன்லாலை வைத்து என்னுடைய கணவர் நான்கு படம் தயாரித்திருக்கிறார். ஒரு முறை நான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவருக்கு 60,000 பணம் கொடுக்க வேண்டும்.

அதற்காக என்னுடைய நகைகளை விற்று என்னால் நடக்க முடியாத சூழ்நிலையில் கஷ்டப்பட்டு பணத்தைக் கொண்டு சென்று கொடுத்தேன்.

விளாசும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

எனினும் அந்த நிலையை எல்லாம் ஒரு நிமிடம் கூட மோகன்லால் நினைத்துப் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய கணவர் இறப்புக்கு கூட மோகன்லால் வர முடியவில்லை.

அதைக் கூட ஜீரணித்து விடலாம். ஒரு முறை ஏர்போர்ட்டில் நான் அவரைப் பார்த்த போது என்னை பார்த்த உடனே தலை தெறிக்க ஓடிவிட்டான் என மரியாதை இல்லாமல் கோபத்தில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.

மேலும் மலையாள திரை பிரபலங்களுக்கு சாப்பாடு போட்ட விஷயத்தை சொல்லி காட்ட விரும்பவில்லை. எனினும் அவருடைய இறுதி காலத்தில் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை.

அவரால் வளர்ந்தவர்கள் அவரின் இறப்பில் கூட பங்கேற்கவில்லை என்ற தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்து இருப்பதோடு தன் கணவரது ஒளிப்பதிவு திறமையை இன்றும் திரைத்துறையில் இருக்கும் பலரும் பாராட்டி வருகிறார்கள் என்பதையும் கூறுகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version