நான் லவ் மேரேஜ் தான் பண்ணிகிட்டேன்.. ஆனா.. இதை பண்ணது இல்ல.. கூச்சமின்றி கூறிய ஷிவாதா நாயர்..!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டவர் தான் ஷிவாதா நாயர்.

சிறீலேகா கே. வி என்பதுதான் இவரது இயற்பெயர். திரைப்படத்திற்காக ஷிவாதா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

நடிகை ஷிவாதா நாயர்:

தற்போது 38 வயதாகும் ஷிவாதா நாயர் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த கேரள கபே என்ற திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .

அதுதான் அவரது முதல் திரைப்படமும் கூட ஆனால் இவருக்கு போதுமான அங்கீகாரம் அந்த முதல் படத்தில் கிடைக்கவில்லை .

இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்த போது திரைப்பட வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்தார் .

அதன் மூலம் தான் மலையாள திரைப்படங்களில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. பகத் பாசில் இவரை சந்தித்தபோது 2011 ஆம் ஆண்டு தன்னுடைய “லிவிங் டு கெதர்” திரைப்படத்தில் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

பகத் பாசிலே தேடி வந்த வாய்ப்பு கொடுத்ததால் அதை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் ஷிவாதா. அப்படத்தின் மூலம் பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

நெடுஞ்சாலை படத்தில் ஷிவாதா நாயர்:

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கத் துவங்கியது . ஆம் நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிய திரைப்படத்தில் ஷிவாதா நாயரின் நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

குறிப்பாக ஆரி அர்ஜுன் மற்றும் ஷிவாதா நாயரின் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்டவை எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வெகுவாக பாராட்டப்பட்டது என்றே சொல்லலாம்.

இவர்களது ஜோடி பொருத்தம் அவ்வளவு பக்கவாக திரையில் பார்த்து ரசித்தனர். சிவமோகா இயக்கிய ஜீரோ என்ற திரைப்படத்தில் நவீன காலம் மனைவியாக பாரம்பரிய மதிப்புகளை பிடித்துக் கொண்டவராகவும் நடித்திருந்தார்.

திருமண வாழ்க்கை:

அந்த படத்தில் பிரியா என்ற கேரக்டரில் அவர் நடித்து பெரும் புகழ்பெற்றார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஷவாதா தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் பெரிதாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவே இல்லை .

சில வருடங்கள் பட வாய்ப்புகள் தேடி வந்தார். ஆனாலும் அது வேலைக்கு ஆகவில்லை என்பதை உணர்ந்து. தனது நீண்ட நாள் காதலரான முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமா பார்க்கமே தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்தும் காதல் கணவரை குறித்தும் பேசி இருக்கிறார்.

அதாவது நானும் என் கணவரும் பல வருடங்களாக கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக காதலித்தோம்.

ஆனால், மற்ற காதலர்களைப் போல அடிக்கடி அவுட்டிங் செல்வது சேர்ந்து வெளியில் சுற்றுவது, மணி கணக்கில் போனில் பேசுவது, இரவு நேரங்களில் தூங்காமல் பேசிக் கொண்டிருப்பது இதுபோன்ற எந்த விஷயத்தையும் செய்ததே கிடையாது.

காதலிக்கும் போது அதெல்லாம் பண்ணல:

இருவரும் காதலிக்கிறோம் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். இருவர் மீதும் நம்பிக்கை அதிகம் இருந்தது.

அதீத காதல் இருந்தது. அதனால் தாங்கள் தங்களுடைய வேலை மட்டும் செய்து கொண்டு காதலித்து வந்தோம். இப்படியே எங்களுடைய நாட்கள் நகர்ந்தது .

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தும் திருமணத்திற்கு பிறகும் நாங்கள் இப்பவும் முன்பு எப்படி காதலித்தபோது இருந்தோமோ அதே போல் தான் இருக்கிறோம்.

எனவே என்னுடைய கணவர் எப்போதும் ஒரே மாதிரி இருக்கக்கூடியவர். என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு அவர் துணை நின்று எனக்கு அதிகம் சப்போர்ட் செய்தார் என ஷவாதா நாயர் தன்னுடைய அழகான காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version