சஞ்சீவ் அக்கா நடிகை சிந்து.. எப்படி இறந்தார் தெரியுமா..?

பார்க்கும் போது அசப்பில் தளபதி விஜய் போலவே இருக்கும் நடிகர் சஞ்சீவ் தளபதி விஜயின் நீண்ட கால நண்பராக விளங்குகிறார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களில் கலக்கி வருகிறார். இவர் அசப்பில் விஜய் போலவே அப்படியே இமிடெட் செய்து நடிப்பதாக பலரும் பல்வேறு கருத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

நடிகர் சஞ்சீவ்..

தற்போது வானத்தைப் போல தொடரில் இன்ஸ்பெக்டராக நடித்து வரும் நடிகர் சஞ்சய் ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: இந்த வயசுலயும் இப்படியா.. ஏர் ஹோஸ்டர்ஸ் உடையில்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த கரீனா கபூர்..!

மேலும் ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு என்ற படக்குழு பிக் பாஸ் நிகழ்விற்கு சென்றிருந்தார்கள். இதில் அன்பறிவு படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் தன்னை சஞ்சீவின் உறவுக்காரர் என சொல்லிக் கொண்டார்.

அந்த சமயத்தில் சஞ்சீவ் பேசும் பொழுது தனது அக்காவின் இறப்பை அடுத்து தனது அக்கா மகளை ஒரு சிறந்த இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு தனக்கு இருந்ததாக வெளிப்படுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சஞ்சீவிக்கு அக்காவா? அதுவும் நடிகையா? என்று பலரும் பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தார்கள். அத்தோடு அந்த அக்கா தற்போது இல்லையா? என்ற விஷயத்தையும் அது எப்படி நடந்தது என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்தார்கள்.

சஞ்சீவின் அக்கா சிந்து..

அந்த வகையில் சஞ்சீவின் அக்கா யார் தெரியுமா? இணைந்த கைகள் படத்தில் ராம்கியோடு சேர்ந்து நடித்த பிரபல நடிகை சிந்து தான் சஞ்சீவி அக்கா.

இந்த படத்தில் அறிமுகமான சஞ்சீவின் அக்கா சிந்து இந்த படத்தை அடுத்து பட்டிக்காட்டு பரம்பரை, சின்னத்தம்பி போன்ற பல தமிழ் படங்களில் குறிப்பிட்ட குண சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

கடைசியாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆனால் இந்த படம் இவர் இறப்புக்கு பின்பு தான் வெளிவந்தது.

எப்படி இறந்தார் தெரியுமா?..

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது குறைந்ததை அடுத்து சின்னத்திரை பக்கம் கடை போட்டார்.

இதனை அடுத்து சின்ன திரையில் வெளி வந்த மெட்டிஒலி சீரியலின் மூலம் மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு இல்லத்தரசிகள் விரும்பும் நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து 1995 ஆம் ஆண்டு திருமணத்தை செய்து கொண்ட இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நடிகை சிந்துவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே இவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்துள்ளது. இதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்பட்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த சமயத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக நடிகை சிந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று நிதி சேகரித்தார்.

இதையும் படிங்க: 22 வயசு நடிகையுடன் கள்ள தொடர்பு.. நடுத்தெருவுக்கு வந்த திரை பிரபலம்.. பலித்த மனைவியின் சாபம்..

ஏற்கனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நீண்ட தூரம் நடந்து சென்றதால் இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் இறந்து விடுகிறார். அப்போது சிந்துவின் மகளுக்கு வெறும் 9 வயது தான்.

இதனை அடுத்து சிறு வயது முதற்கொண்டு சஞ்சீவி தனது அக்கா மகளை சீரும் சிறப்புமாக பார்த்துக் கொண்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version