90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிவரஞ்சனி.
இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார்.
90ஸ் நடிகை சிவரஞ்சனி:
தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டு வந்தார்.
முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான”ஹிருதய சம்ரயா” என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார்.
அதை எடுத்து தமிழ் சினிமாவில் அதே ஆண்டில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயர் கொடுக்கவில்லை.
பின்னர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் திரைப்படத்தில் சோபனா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக புகழ் பெற்றார்.
தொடர்ந்து தங்க மனசுக்காரன்,டிராவிட் அங்கில், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, காத்திருக்க நேரமில்லை, அரண்மனை காவலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிவரஞ்சனியின் ஹிட் படங்கள்:
மேலும், ராசா மகன் , வண்டிச்சோலை, சின்ராசு ,செந்தமிழ்ச்செல்வன், அவதார புருஷன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை சிவரஞ்சனி.
இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமே அப்போது இருந்தார்கள். ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக சிவரஞ்சனி நல்ல முக ஜாடையோடு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
பூனைக்கண் அழகியாக கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராய் லுக்கில் அந்த காலத்திலேயே அறிமுகமான சிவரஞ்சனிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தார்கள்.
பூனை கண் வசீகரப்பார்வை:
இவரின் வசீகர பார்வைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சொக்கி மயங்கினார்கள் என்றே கூறலாம். பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோதே இவர் நடிகர் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் .
ஸ்ரீகாந்த் பிரபல தெலுங்கு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் .
ஸ்ரீகாந்த் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக டோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்தார்.
ஹேண்ட்ஸம் ஹீரோவாக பார்க்கப்பட்ட அவரை நடிகை சிவரஞ்சனி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இவர்களுக்கு ரோஷன், மேதா, ரோஹன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணம், குழந்தை, குடும்பத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார் சிவரஞ்சனி.
இந்நிலையில் சிவரஞ்சினியின் தற்போது நிலை குறித்த தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆம் நடிகை சிவரஞ்சனியின் சமீபத்திய குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .
தற்போதைய நிலை:
அதில் அவரது மூத்த மகன் பார்க்கவே மிகவும் ஹேண்ட்ஸமாக ஹீரோ லுக்கில் இருப்பதை பார்த்து இவர் நிச்சயம் திரைப்படங்களில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக டோலிவுட் இயக்குனர்களின் கவனம் சிவரஞ்சினியின் மகன் மீது பாய்ந்திருக்கிறது. சிவரஞ்சினியின் கணவர் ஆன நடிகர் ஸ்ரீகாந்த் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.