வேர்வையால் தொப்பறையாக நனைந்த புன்னகையரசி சினேகா.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து இளமையை கடைப்பிடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை மிக எளிமையாக அவர்கள் தங்கள் வயதை குறைத்து காண்பித்துக் கொள்வார்கள்.

வயதானாலும் கூட அது பெரிதாக வெளியில் தெரியாது. ஆனால் பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு அதிக வயதானால் அதை வெளியில் அதிகமாக காட்டி கொடுத்து விடும் என்பதாலேயே 30 முதல் 35 வயதை தாண்டிய பிறகு ஒரு நடிகைக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது குறைந்துவிடுகிறது.

இருந்தாலும் சினிமாவில் இருக்கும் சில நடிகைகள் தொடர்ந்து அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் மூலமாக வயது தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியான ஒரு நடிகையாகதான் சினேகாவும் இருந்து வருகிறார்.

புன்னகையரசி

அதன் காரணமாகதான் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை சினேகா. சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இவருக்கு தற்சமயம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

குழந்தைகள் பெற்றுக்கொண்டாலே உடலில் பெரிதாக மாற்றம் ஏற்படும். அதனால்தான் நடிகை நயன்தாராவே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார். ஆனால் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டும் கூட நடிகை சினேகா தொடர்ந்து அவரது உடல்நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

தொப்பறையாக நனைந்த சினேகா

சினேகா தற்சமயம் மீண்டும் சினிமாவிற்கு வர இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். எப்படி கேரளாவில் மஞ்சு வாரியர் இன்னமும் இளமையாக தன்னை காட்டிக் கொள்கிறாரோ அதேபோல சினேகாவும் இளமையாக காட்டிக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

உடல் எடையை தொடர்ந்து குறைத்து வருகிறார் சினேகா. முன்பு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போது இருந்ததை விடவும் தற்சமயம் உடல் எடையை குறைத்து வருகிறார் சினேகா. ஏனெனில் கோட் திரைப்படம் மூலமாக இன்னும் அதிகமாக வரவேற்பை பெற முடியும் என்பது அவரது எண்ணமாக இருந்து வருகிறது.

கிறுகிறுத்து போன ரசிகர்கள்

இந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சினேகா இந்த வீடியோ தான் இப்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் மத்தியிலும் இது அதிக பிரபலமாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த சினேகாவாக மறுபடியும் வருகிறார் என்று இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version