அது மாதிரி நேரத்தில் நைட் டேட்டிங் போவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை சினேகா..!

சினிமா நடிகைகள் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள், கஷ்டங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர்களும் வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலையில் பல நேரங்களில் கைதிகளாக இருந்து பல சிரமங்களை சந்தித்தவர்களாகத்தான் இருக்கின்றனர். எல்லாருக்கும் எப்போதும் எல்லாமே சரியாக நடந்து விடுவதில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

சினேகா

கடந்த 1990களில், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் என்ற படம் மூலம் இவர் பிரசாந்த் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். புன்னகை அரசி என்று ரசிகர்களால் இவர் அன்பாக அழைக்கப்பட்டார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை சினேகா, முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்தவர் சினேகா.

பிரசன்னாவுடன் காதல்

கடந்த 2012 ஆம் ஆண்டு, சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு பெற்றோரும் சம்மதித்து இவர்கள் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது.

இப்போது பிரசன்னா – சினேகா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்ட நடிகை சினேகா, டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். தவிர விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்கிறார். சமீபத்தில் அவர் சினேகாலயா என்ற புதிய ஜவுளிக்கடை ஒன்றை திறந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனித்தனியாக வாழ்ந்தோம்

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சினேகா, பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நானும் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பின்பும் சில காரணங்களுக்காக பிரைவசிக்காக நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ முடியாமல், தனித்தனியாக வாழ்ந்தோம்.

திருமணமான புதிதில் எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. அதனால் நான் என் வீட்டுக்கு சென்று விட்டேன். கல்யாணம் முடிந்து 15 முதல் 20 நாட்கள் வரை அப்படி நாங்கள் தனியாகத்தான் இருந்தோம் .

இரவில் டேட்டிங் செல்வோம்

குழந்தைகள் பிறந்த பிறகு கவனம் எல்லாம் குழந்தைகள் மீது சென்று விட்டது. இப்போதும் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற கவலை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் ஒரு கட்டத்தில், வாழ்க்கையில் எங்கள் இருவருக்குமே ஒருவித சலிப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி ஆத்தா.. எம்மாம் பெருசு.. முதன் முறையாக நீச்சல் உடையில் மைனா நந்தினி.. வைரல் வீடியோ..!

அந்த மாதிரியான சமயத்தில் நாங்கள் இருவரும் இரவு நேரத்தில் டேட்டிங் செல்வோம். அப்போது பல விஷயங்களைப் பற்றி இருவரும் மனம் திறந்து பேசுவோம். அப்போதுதான் எங்களுக்கு இடையில் இருந்த ஸ்பார்க் மீண்டும் வரும்.

அடிக்கடி சண்டை வரும்

எனக்கும் பிரசன்னாவுக்கும் இடையே சண்டை அடிக்கடி வரும். எலியும் பூனையும் போல மிக மோசமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால், சண்டை முடிந்த பிறகு நாங்கள் இருவரும் இருவருடைய கருத்தையும் புரிந்து கொள்வோம் என்று சினேகா வெளிப்படையாக அதில் பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “யாருக்குமே இந்த கொடுமை நடக்க கூடாது..” என் அம்மாவே இதை செய்தார்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!

வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் நேரத்தில் நைட் டேட்டிங் போவேன் என்று கூச்சமின்றி ஓப்பனாக நடிகை சினேகா பேசியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் அடையச் செய்துள்ளது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version