நான் அந்த மாதிரி பொண்ணா..? தனுஷிடம் கதறிய நடிகை சினேகா..! என்ன நடந்தது…?

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்து நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தவர் தான் சினேகா .

இவரது பிளஸ் பாயிண்ட்டே இவரது ஸ்மைல் தான். இவரது சிரிப்பழகை பார்த்து புன்னகை அரசி என ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.

புன்னகை அரசி சினேகா:

தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சினேகா .

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் அழகாக தமிழ் பேசும் தமிழ் பெண்ணாகவே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார் .

2001 ஆம் ஆண்டு வெளிவந்த “என்னவளே” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சினேகாவுக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம் , விரும்புகிறேன், பம்மல் கே சம்மந்தம் , புன்னகை தேசம், வசீகரா , ஜனா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர் வெற்றி படங்கள்:

சிலம்பாட்டம், கோவா, உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் .

இதனிடையே புன்னகை தேசம் , உன்னை நினைத்து , விரும்புகிறேன் ஆகிய திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிகையாக விருதுகளையும் பெற்று கவுரவிக்கப்பட்டார்.

முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வந்த சினேகா ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு கன்னியாக பார்க்கப்பட்டு வந்தார்.

காதல் திருமணம்… குடும்ப வாழ்க்கை:

இதனிடையே அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படம் 2009 இல் வெளிவந்தது .

இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது பிரசன்னாவை காதலித்த சினேகா அவரை பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சினேகாவின் ரீ என்ட்ரி:

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சில வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த சினேகா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினேகா குறித்து பிரபல பத்திரிகையாளர் ஆன செய்யாறு பாலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது,

சினேகா தனுஷிடம் அழுது கதறிய சம்பவம் ஒன்றை குறித்து பேசி இருக்கிறார். அதாவது, சினேகா தெரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்பட்டது புதுப்பேட்டை படம் தான்.

தனுஷிடம் கதறி அழுத சினேகா:

அந்த திரைப்படம் கிளாசிக் வெற்றி திரைப்படமாக கொண்டாடப்பட்டது. அந்த திரைப்படத்தில் சினேகா விலைமாது கேரக்டரில் நடித்திருப்பார்.

கேரக்டர் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது தனது கேரக்டரை மிகச் சிறப்பாக செய்து நல்ல பெயரை பெற்றிருந்தார்.

ஆனால், அந்த கேரக்டர் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு பிடிக்கவில்லை. நான் அந்த மாதிரி பெண்ணா நடிக்கிறேனா என தனுஷிடம் கூறி கதறி அழுதாரம் சினேகா .

அதற்கு தனுஷ் அழாதீங்க… கண்டிப்பா இந்த கதாபாத்திரம் உங்களுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என உறுதியாக கூறினாராம்.

அந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும் சினேகாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் முகம் சுளிக்கும் படியாக தான் இருந்தது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version