கல்யாண வாழ்க்கை போர் அடிச்சா இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய சினேகா..!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினான நடிகை சினேகா புன்னகை அரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் புகழ் பாராட்டப்பட்டவர்.

இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமா தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்து உச்ச நடிகையாக உட்கார வைத்தது.

சிரிப்பழகி சினேகா:

தமிழில் 2000ம் கால கட்டங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.

என்னவளே படத்தின் மூலம் அறிமுகமான சினேகா பம்மல் கே சம்பந்தம், ஆட்டோகிராப் ,புதுப்பேட்டை, பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்கள் அவரது கரியரில் மிக முக்கிய படங்களாக அமைந்தவை.

இதனிடையே இளம் நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவரும் நடிகை சினேகா தற்போது விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கணவருடன் சண்டை:

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா உடன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகை சினேகா பிரசன்னா உடனான,

12 வருட திருமண வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை குறித்து கலகலப்பாக பேசினார் அப்போது…

12 வருட வாழ்க்கை என்பது சுலபமே கிடையாது இத்தனை வருடத்தில் உங்களுக்கு போர் அடிப்பது போல் எப்போ ஆவது உணர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என ரம்யா கேட்டதற்கு நடிகை சினேகா,

இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு வருட வாழ்க்கையில் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்று அவ்வளவு சுலபம் கிடையாது.

ஆனால் இதனை வருடத்தில் எந்த ஒரு இடத்திலும் எங்களது வாழ்க்கை போரடித்தது போல் நாங்கள் உணர்ந்ததே கிடையாது .

கல்யாண வாழ்க்கை போர்:

எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். நாங்கள் ரெண்டு பேரும் எலி, பூனை மாதிரி சண்டை போட்டுப்போம்.

ஆனால் அந்த சண்டையோட முடிவுல என்னோட பாயிண்ட் என்ன? அவரோட பாயிண்ட் என்ன? என்ற ஒரு புரிதல் இருவருக்குள்ளேயே வந்துவிடும்.

அந்த புரிதல் இல்லன்னா நம்ம சண்டை போட்டதுக்கும்.. எத்தனை வருஷம் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை அப்படின்னு தான் நான் சொல்லுவேன்.

எனக்வே எங்களுக்குள்ளநல்லா புரிதல் இருக்கு. அதுமட்டுமில்லாமல் அந்த மாதிரி டைம்ல சண்டை வந்துடுச்சு ரொம்ப போரிங்கா ஃபீல் பண்ணோம்னா நாங்க அவுட்டிங் கிளம்பிடும்.

டேட், நைட் அவுட்டிங் என கிளம்பி சென்று ரொம்ப மகிழ்ச்சியாக எங்களோட நேரத்தை நாங்கள் செலவிடுவோம்.

வாழ்க்கையின் எதார்த்தம்:

குறிப்பா நாங்க குழந்தைகள் இல்லாமல் எங்கேயுமே வெளியே போக மாட்டோம். அந்த சமயத்துல குழந்தைகளை பற்றியும் எங்களோட பாஸ்ட்ல,

நாங்க காதல் பண்ணும் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பத்தியும் பேசிக்கொள்வோம். அப்போ எங்களுக்குள்ள ஒரு புத்துணர்ச்சி உண்டாகும்.

அதன் பின்னர் அடுத்த ஒரு ஆறு மாசம் இப்படியே போய்விடும். மறுபடியும் சண்டை வரும் இப்படித்தான் எங்களுடைய வாழ்க்கை கடந்து போயிட்டு இருக்கு அப்படின்னு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறினார் நடிகை சினேகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version