என்னய முடிச்சு வுட்டீங்க போங்க.. புன்னகையரசி சினேகா வீடியோ.. மட்டையான ரசிகர்கள்..!

புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்து இழுத்தவர் தான் நடிகை சினேகா. 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்த சினேகாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தார்கள் .

விஜய்,ஸ்ரீகாந்த், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான ஹீரோயின் ஆக இடத்தைப் பிடித்தார்.

நடிகை சினேகா:

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சினேகா.

ஆனால், பார்ப்பதற்கும் பேசுவதை கேட்டாலும் அவர் மும்பை பெண் என்று சொல்ல முடியாத அளவுக்கு தமிழ் உச்சரிப்புடன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாக நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

முதல் படத்திலிருந்து திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. இதனால் மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார்.

சினேகாவின் வெற்றி திரைப்படங்கள்:

தொடர்ந்து சினேகா நடிப்பில் வெளிவந்த புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்கள் அவருக்கு பெரும் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

இதனிடையே பிரபல நடிகர் ஆன பிரசாந்த் அவர்களை அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சேர்ந்து நடித்த போது காதலித்து பின்னர் 2009 ஆம் ஆண்டில் அவர் திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணம் குழந்தை பிறப்பிற்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த சினேகா தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி இருக்கிறார்.

இரண்டாவது இன்னிங்ஸ்:

 

இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்த சினேகா முன்னதாக தனுஷ் உடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார் .

அதை எடுத்து தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில். நடித்த வருகிறார். விஜய் மற்றும் சினேகா சம்பந்தமான பாடல் ஒன்று கூட இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தது.

பல வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் சினேகா சேர்ந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்து இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த வயசுலயும் இப்படியா….?

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை சினேகா.

அந்த வகையில் தற்போது கடுமையாக ஜிம் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சினேகாவின் உடற்பயிற்சி வீடியோவை பார்த்த ரசிகர்கள்.. என்னய முடிச்சு வுட்டீங்க போங்க.. இந்த வயசுலயும் இப்படியா என புலம்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ:

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …