இப்போ அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக சொன்ன நடிகை சோனா..!

அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானவர் நடிகை சோனா. 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியது.

மேலும் அந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வெற்றியை கொடுத்தன. அதன் மூலம் அறிமுகமான காரணத்தினால் இவருக்கும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கினார் சோனா.

கதாநாயகியாக முதல் படம்:

2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக முதன்முதலாக அறிமுகமானார். அதற்கு முன்பு வரை துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் கதாநாயகியாக அறிமுகமாகும் போது கவர்ச்சி கதாநாயகியாக அறிமுகமானது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

பொதுவாகவே கவர்ச்சி காட்டி நடித்து நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்பு விஜய்யுடன் சேர்ந்து இப்படித்தான் நடிகை சங்கவி தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வந்தார் ஆனால் பிறகு சில நாட்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைந்துவிட்டது.

அதேபோல நடிகை சோனாவிற்கும் போக போக வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஆரம்பத்தில் அவருடைய கவர்ச்சிக்கு ஓரளவு எதிர்பார்ப்புகள் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையாக சினிமாவில் வலம் வர வேண்டும் என்பது அவரது ஆசை கிடையாது.

கவர்ச்சி நடிகையாக வாய்ப்பு:

இருந்தாலும் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக வாய்ப்புகள் வந்த காரணத்தினால் அவரும் கவர்ச்சியாகவே நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு மாதிரியான பெரிய பிரபலங்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார் நடிகை சோனா.

இதன் காரணமாக அதற்குப் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பதே இல்லாமல் போனது. இந்த நிலையில் தன்னுடைய இளம் வயது பழக்கம் குறித்து சோனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நான் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன்.

கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கூட இப்பொழுது நிம்மதியாக இருக்கிறேன் சினிமாவில் அறிமுகமான ஆரம்பம் முதலே சினிமா என்றாலே ஒரு போதை என்ற எண்ணத்தில்தான் இருந்தேன்.

மேலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தேன். கேமரா முன்பு நடிக்கும் பொழுது மது அருந்திவிட்டு நடந்தால் எளிமையாக இருக்கிறது என்று பழகி ஒரு கட்டத்தில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். ஆனால் தற்சமயம் குடி பழக்கத்தை நிறுத்தி விட்டேன்.

சாதாரண பெண்களை போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கே நான் நினைக்கிறேன். இனிமேல் சீரியல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

அதன் மூலமாக கவர்ச்சி நடிகை என்னும் என்னுடைய பிம்பத்தை உடைக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சோனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version