அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி புட்டு புட்டு வைத்த அஜித் பட நடிகை..! இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டாரே..!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்றால் அவர்கள் எடுத்த உடனே கவர்ச்சியில் நடிக்க கூடாது என்பதுதான். கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளுக்கு கதாபாத்திரங்களாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும்.

ஏனெனில் எப்போதுமே சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் மிகவும் குறைவு. அதனால் அப்படி வரும் நடிகைகளை அதிகபட்சம் கவர்ச்சி நடிகைகளாய் மாற்றுவதற்கு ன் தமிழ் சினிமா முயற்சி செய்யும்.

நல்ல கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை:

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே கவர்ச்சி நடிகை ஆனவர்தான் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நல்ல கதாபாத்திரத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார் சோனா.

ஆனால் திரைத்துறையில் இருக்கும் அரசியல் தெரியாமல் தொடர்ந்து தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் அவர் கோட்டை விட்டுவிட்டார் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்திற்கு பிறகு நடிகை சோனா தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் எல்லாம் அவர் அதிகமான கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார்.

இதனால் அவருக்கு திரும்பத் திரும்ப கவர்ச்சியாக நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து அவரும் ஒதுங்கி விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்த விஷயங்கள் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பேட்டியில் கூறிய விஷயம்:

இந்த பேட்டியில் பேசிய சோனா கூறும் பொழுது நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். ஒரு கட்டத்தில் இப்படி நடிப்பது என்பதே எனக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே கவர்ச்சி நடிகை என்கிற அடையாளத்தை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் பல திரைப்படங்களில் வாய்ப்பு கேட்டும் அதற்கான வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் சினிமாவை விட்டு எப்பொழுதும் சின்ன திரையில் மட்டும் நடித்து விடவே கூடாது என்ற மனநிலையில் இருந்தேன். ஆனால் கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தை உடைக்க சின்னத்திரைதான் சரியான இடம் என்று தெரிந்து கொண்டேன்.

எனவே சின்னத்திரையில் பிறகு வாய்ப்புகளை தேடி போனேன். சின்னத்திரையில் நடிக்க சென்ற உடனே முதலில் அம்மா கதாபாத்திரத்தில்தான் நடிக்க துவங்கினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம்தான் கவர்ச்சி நடிகை என்கிற பிம்பத்தை உடைப்பதற்கு உதவும்.

திரைத்துறையில் நுழைந்த கால கட்டங்களில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது சாதாரண விஷயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அது இன்னமும் மோசமாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முன்பை விட இப்பொழுது அட்ஜஸ்ட்மென்ட் இயல்பாக இருக்கிறது.

ஆனால் அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட முடிவை சேர்ந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நான் ஆரம்ப காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களாக நடித்ததால் அதைப்பற்றி இப்போதுதான் புலம்பி கொண்டிருக்கிறேன்.

அதனால் ஏற்பட்ட பாதிப்பு முழுவதையும் நான்தான் அனுபவிக்கிறேன் அதேபோலதான் அவர்களுக்கும் அது நடக்கும் அதற்கான பாதிப்பு அவர்களுக்கு வந்தே தீரும். அதனை நாம் வெளியில் இருந்து சரி தவறு என்று கூறக்கூடாது என்று கூறியிருக்கிறார் நடிகை சோனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version