இவ்ளோ அழகா இருக்கீங்க.. அதுக்கு கூப்பிட்டிருக்காங்களா..? நடிகை ஸ்ரீரஞ்சனி கொடுத்த பதில்..!

சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரீ ரஞ்சனி. இவரது பெயரே ரசிகர்களுக்கு தெரியாது என்றாலும் கூட அவரை அனைவருக்கும் தெரியும்.

நிறைய திரைப்படங்களில் அவரை மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த நடிகையின் பெயர் என்ன என்று மட்டும் அப்பொழுது பெரிதாக யோசித்து இருக்க மாட்டார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரஞ்சனி என்று கூறலாம்.

தமிழில் பல படங்களில் நடித்த நடிகை:

கிட்டத்தட்ட 110 திரைப்படங்களில் இதுவரை நடித்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி அது மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நிறைய இவர் நடித்திருக்கிறார். 2000 ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில்தான் முதன்முதலாக மாதவனுக்கு அன்னி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீரஞ்சனி.

அதற்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நிறைய நடிகர்களுக்கு தாயாகவும் அண்ணியாகவும் நடித்திருக்கிறார். போக்கிரி, மொழி, திமிரு, சர்வம், மாப்பிள்ளை, தம்பிக்கோட்டை என்று பிரபல நடிகர்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பை பெற்று நடித்து வந்தவர் ஸ்ரீ ரஞ்சனி.

இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் குறித்து தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். அதில் சுவரஸ்யமான பல விஷயங்களை மக்களுடன் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி. அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக வரும் பொழுது எனக்கு தமிழே தெரியாது.

தமிழ் தெரியாமல் பட்ட கஷ்டம்:

ஆரம்பத்தில் சுத்தமாக தமிழ் தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன் திரைப்படத்தில் நான் நடித்த பொழுது என்னை பலரும் நீங்கள் நிஜமாகவே மாதவனின் அன்னியா? என்று கேட்டார்கள். அந்த அளவிற்கு முதல் படமே எனக்கு பிரபலத்தை கொடுத்தது.

அந்த சமயத்தில்தான் இயக்குனர் கே பாலச்சந்தர் காசளவு நேசம் என்கிற டிவி தொடரை இயக்கி வந்தார். அதில் நானும் நடித்தேன் அப்பொழுது அதில் சமுத்திரகனிதான் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர்தான் எனக்கு வசனங்களை சொல்லிக் கொடுப்பார்.

எனக்கு  தமிழே தெரியாது என்பதால் அப்பொழுதெல்லாம் சமுத்திரகனியை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். ஆனால் போக போக பிறகு சமுத்திரகனி மீது எனக்கு நல்ல நட்பு உருவானது என்று கூறுகிறார் ஸ்ரீ ரஞ்சனி.

தமிழில் சந்திரகனி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். பொதுவாக ஸ்ரீ ரஞ்சனி நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் சாந்தமான ஒரு கதாபாத்திரமாக ஒரு தெய்வீகமான கதாபாத்திரமாகதான் இவர் நடித்திருப்பார்.

ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நாம் இவரை யோசித்துப் பார்க்க முடியாது என்று கூறலாம் இந்த நிலையில் இது குறித்து அவரிடம் பேட்டி எடுக்கும் பொழுது இவ்வளவு அழகா இருக்கீங்க நீங்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கீங்களா? என கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்ரீ ரஞ்சனி நான் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இப்படி பன்முக திறமை கொண்டவராக இருந்து வருகிறார் ஸ்ரீ ரஞ்சனி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version