மிஸ்டர்.பெண்கள் விரும்பி.. உனக்கு நான் இதை கொடுக்கவா..? விஷால் பேச்சுக்கு ஸ்ரீரெட்டி பதில்..! அதிருது சோசியல் மீடியா..!

கடந்த சில நாட்களாகவே மலையாள சினிமாவுலகில் பாலியல் புகார்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகைகள் பிரபலமான தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

பாலியல் புகார்:

இதனால் மோகன் லால் உள்ளிட்ட கிட்டத்தட்ட 17 நிர்வாகிகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்கள் .

இந்த விஷயம் மேலும் பூதாகரத்தை கிளப்பியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் கேள்வி எழுப்பதற்கு…

பத்திரிகையாளருக்கு பதில் அளித்த விஷால்…. தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள். எனவே 20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள் ? அவர்கள் சொல்வது உண்மையா? அவர்கள் உண்மையிலே திரைப்படம் எடுக்கிறவர்களா?என்பதை சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

ஹேமாக கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்க சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவிலும் ஹேமாக கமிஷன்:

எனவே விரைவில் இந்த சூழல் நம் கோலிவுட் சினிமாவிலும் அமைக்கப்படும். யாரோ ஒருவர் பைத்தியக்காரத்தனமாக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

ஆனால், பெண்ணுக்கு தான் தைரியம் இருக்க வேண்டும். அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் என நடிகர் விஷால் அதிரடியாக கருத்து பேசி இருந்தார் .

மேலும் நடிகர் விஷால் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி ஏற்கனவே பாலியல் புகார் அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது… நடிகர் விஷால் ஸ்ரீ ரெட்டி யார் என்று எனக்கு தெரியாது.

அவர் செய்த சேட்டைகள் தான் எனக்கு தெரியும். ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது தவறானது என கூறினார்.

நடிகர் விஷாலின் இந்த அதிரடியான பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து தற்போது விஷாலின் இந்த பேச்சுக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார் .

அதில் நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியிருப்பதாவது…. ஹாய் மிஸ்டர் பெண்கள் விரும்பி…. வயசான வெள்ளை முடி அங்கிள்! நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி கருத்து சொல்வதற்கு முன்னர் உன் நாக்கு கவனமாக இருக்க வேண்டும் .

செருப்படி கொடுக்கவா…? ஸ்ரீ ரெட்டி காட்டம்:

நீ பெண்களைப் பற்றி அவதூறு பேசுவது…. உன்னை சுற்றி இருக்கும் பெண்களுக்கு எப்போதும் தொந்தரவு கொடுப்பது எல்லாமே இந்த உலகத்துக்கு தெரியும்.

மேலும், நீ எவ்வளவு பெரிய ஃப்ராட் என்று ஊருக்கே தெரியும். ஊடகத்தின் முன் உன்னைப் பற்றிய இத்தனை உண்மைகள் தெரிந்த பின்னும் உன்னை ஜெண்டில்மேன் என்று மக்கள் நம்புவார்கள் என்று நினைக்காதே.

உன் வாழ்க்கையில் இருந்த பெண்கள்…. உன் திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனது எல்லாம் ஏன்? இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.

ஏற்கனவே கர்மா உன் வாழ்க்கையில் நல்லா விளையாடுது… என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கின்றன.

அதில் ஒன்று உனக்கு வேண்டுமா?” என கடுமையாக திட்டி ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சோஷியல் மீடியாக்களில் பற்றி எரிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version