கணவர் கூட இதை பண்ணவே இல்ல.. அப்புறம் எப்படி என் குழந்தை.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!

1969-ஆம் ஆண்டு பிறந்த நடிகை சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கனவு கன்னியாக திரையுலகில் ஜொலித்தவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி என்பதாகும். இவர் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் நடிக்க இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருந்த இவர் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றி இருக்கிறார்.

நடிகை சுகன்யா..

சுகன்யா இருக்கணும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியதை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா எனும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இதனை அடுத்து மிகச்சிறந்த பாடகையாகவும் இவர் திகழ்கிறார்.

தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை இவர் முதலில் நடித்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து என்பது தான் என்ற திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது தான் இயக்குனர் பாரதிராஜா இவருக்கு சுகன்யா என்ற பெயரை வைத்தார்.

இதனை அடுத்து கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற தமிழில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, உறுதிமொழி, சின்ன மாப்பிள்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், மகாநதி கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, ஞானப்பழம் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

மேலும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதினை ஐந்து முறை வேண்டிருக்கக்கூடிய இவர் ஒரு சிறப்பான நடன கலைஞராகவும் திகழ்கிறார்.

கணவர் கூட இத பண்ணவே இல்ல..

சினிமாவில் பீக்கில் இருந்த போதே அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களது திருமணம் நிலைத்து நிற்கவில்லை,அத்துடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டார்.

இந்த சூழ்நிலையில் இணையங்களில் சுகன்யாவோடு இணைத்து மற்றொரு இளம் பெண்ணின் போட்டோக்கள் வெளி வந்து அழகில் சுகன்யாவை மிஞ்சும் அவரது மகள் என்ற வகையில் உலா வந்தது.

இதற்கு தக்க பதில் அளிக்கக் கூடிய வகையில் தற்போது சுகன்யா செயல் பட்டு இருக்கிறார். அந்த படத்தில் இருந்தது சுகன்யாவின் மகளின் புகைப்படமா? அல்லது அந்த நபர் யார்? என்ற கேள்விக்கு உரிய விடையை எந்த பதிவில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அப்புறம் எப்படி ரகசியம் உடைத்த சுகன்யா..

நடிகை சுகன்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது பலரும் என்னுடைய உறவினரின் மகளை என்னுடைய மகள் என்று இணையத்தில் தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 அது போலியான தகவல் திருமணம் செய்து என் கணவருடன் நான் முழுதாக ஒரு வருடம் கூட இல்லை. அப்படி இருக்கும் பொழுது அது எப்படி என்னுடைய குழந்தையாகும். நான் இதனை ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்து விட்டேன்.

ஆனாலும் தொடர்ந்து இப்படி செய்திகள் வந்து கொண்டிருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது.

மேலும் ஒன்று அந்த செய்தியை எழுதுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது யாராவது அவர்களுக்கு காசு கொடுத்து இப்படியான பதிவுகளை எழுத சொல்ல வேண்டும் என பேசி இருக்கிறார் நடிகை சுகன்யா.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் படு வேகமாக பரவி வருவதோடு இந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அனைவரும் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version