யப்பா.. சாமி.. நான் என் புருஷன் கூட வாழ்ந்ததே இத்தனை நாள் தான்.. அப்புறம் எப்படி..? சுகன்யா தடாலடி..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுகன்யா. சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் சுகன்யா.

1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில்தான் முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்ட சுகன்யா பிறகு பாரதிராஜாவின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

சின்ன கவுண்டர் படம் கொடுத்த வரவேற்பு:

தொடர்ந்து சின்ன கவுண்டர் திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. சுகன்யா நடித்த திரைப்படங்களில் மூன்றாவது திரைப்படம் சின்ன கவுண்டர் திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் சுகன்யா. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இவர் வாய்ப்புகளை பெற்றார்.

1991ல்தான் இவரது முதல் திரைப்படம் வெளியானது. ஆனால் 1992லையே ஆறு திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஐந்திலிருந்து ஆறு திரைப்படங்களில் வாய்ப்பு பெற்று சுகன்யா நடித்து வந்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்திலும் கமலுக்கு மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

அதிலிருந்து மிக உயிரோட்டமான ஒரு கதாபாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. பிறகு காலங்கள் செல்ல செல்ல நடிகை சுகன்யாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு இவருக்கு வருடத்திற்கு ஒரு திரைப்படம் கிடைப்பதே கடினமான விஷயமாக மாறியது.

சிறுமி சர்ச்சை:

இருந்தாலும் அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் சுகன்யா. இதற்கு நடுவே வெப் சீரிஸ்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுகன்யா சமீபத்தில் கோவிலுக்கு செல்லும் பொழுது ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.

அந்த சிறுமி சுகன்யாவின் குழந்தைதான் என்று ஒரு வதந்தி கிளம்ப துவங்கியது. தொடர்ந்து அவர் அந்த சிறுமியுடன் சென்ற புகைப்படங்கள் எல்லாம் வைரலாக தொடங்கியது. இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சுகன்யா கூறும் பொழுது அது என்னுடைய குழந்தையே கிடையாது.

என் உறவினரின் குழந்தை நான் எனது கணவருடன் வாழ்ந்ததே சில மாதங்கள்தான் அதற்குள் எனக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும் மேலும் அப்படி குழந்தை பிறந்து இருந்தால் இவ்வளவு வருடங்கள் எப்படி அதை மறைத்து வைத்து நான் வளர்க்க முடியும். எனவே இது மாதிரியான போலி தகவல்களை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார் சுகன்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version