இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். நடிகர் பாண்டியன், ரேவதி இப்படி அந்த வரிசையில் புது முகமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்பு பெற்ற ஒரு நடிகைதான் நடிகை சுகன்யா.
தமிழ் சினிமாவில் அவருக்கு பெரும் மார்க்கெட் இருந்தது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு நடிகை அறிமுகமான உடனே அதிக வரவேற்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
ஆனால் அதை மிக எளிதாக பெற்றார் நடிகை சுகன்யா. சுகன்யா நடிப்பில் திரைப்படங்கள் வர துவங்கியது 1991 ஆம் ஆண்டுதான்., முதன் முதலாக புது நெல்லு புது நாத்து என்னும் பாரதிராஜாவின் திரைப்படத்தின் மூலமாகதான் அறிமுகமானார் சுகன்யா.
எடுத்த உடனேயே வரவேற்பு:
அதற்கு முன்பே சுகன்யா கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் என்றும் ஒரு பக்கம் பேச்சு உண்டு. இந்த நிலையில் அதே வருடம் அவரது நடிப்பில் எம்ஜிஆர் நகரில் என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் அதற்கு அடுத்த வருடமே கிட்டத்தட்ட ஏழு திரைப்படங்கள் சுகன்யாவின் நடிப்பில் வெளியானது.
இப்போது இருக்கும் நடிகைகளுக்கு எல்லாம் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒரு வரவேற்பை ஒரு வருடத்திலேயே அடைந்திருந்தார் சுகன்யா. அதில் முக்கியமான திரைப்படம் சின்ன கவுண்டர்.
1992ல் வெளியான சின்ன கவுண்டர் படம் அதிக வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான விருதையும் சுகன்யாவிற்கு பெற்றுக் கொடுத்தது. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது 16 வயதிற்கும் குறைவான வயதில்தான் இருந்தார் நடிகை சுகன்யா.
மார்க்கெட் இழப்பு:
ஆனால் அதற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் 1996க்கு பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. இத்தனைக்கும் 1996 இல் தான் இந்தியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுகன்யா.
இருந்துமே கூட அதற்கு பிறகு அவருடைய வாய்ப்புகள் குறைய துவங்கின தற்சமயம் பெரிதாக சினிமாவில் வரவேற்பு இல்லாமல்தான் இருந்து வருகிறார் சுகன்யா. இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய அக்கா மகள் குறித்தும் தன்னுடைய விவாகரத்து குறித்தும் அடிக்கடி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியாகி வருவது குறித்து பேசி இருந்தார் சுகன்யா.
அதில் அவர் கூறும் பொழுது தொடர்ந்து என்னை குறித்து தவறான தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றது. அதை யார் வெளியிட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அக்கா மகளை என்னுடைய சொந்த மகள் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து வெளியிடுபவர்களுக்கு ஒன்று மனநிலை சரியில்லாமல் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னை பற்றி இப்படி எழுதுவதற்கு யாரிடமாவது காசு வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை சுகன்யா.