1980 களிலிருந்து 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை பானுப்பிரியாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமுந்திரியில் பிறந்த இவர் இளமைக்காலம் முதற்கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். இது வரை சுமார் 111 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் தெலுங்கில் தமிழில் 40-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
கிளாசிக்கல் பியூட்டி பானுப்ரியா..
இந்நிலையில் அண்மையில் நடிகை பானுப்பிரியா பற்றி சுஹாசினி பேசிய பேச்சானது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது. அந்த வகையில் பானுப்பிரியாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி பேசிய சுஹாசினி அவரை ஒரு கிளாசிக்கல் பியூட்டி என்று சொன்னதோடு பழம் பெரும் நடிகையான சரோஜா தேவியோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: எல்லாருமே பாருங்க.. உள்ளாடை அணியாமல் ரெஸ்டாரண்ட்டில் அனிகா சுரேந்திரன்.. மூச்சு முட்டும் ரசிகர்கள்..
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய பானுப்பிரியா மிகச்சிறந்த நடனத்தையும் ஆடி அசத்தி விடக்கூடிய தன்மை கொண்டவர். தமிழில் மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பை 1991 இல் வெளி வந்த அழகன் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் 1989-இல் ஆரிராரோ ஆரிராரோ என்ற படத்தில் பாக்கியராஜோடு இணைந்து தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டவர்.
அவ.. ஒரு.. அரக்கி.. ராக்ஷஷி..
நடிப்பில் இவர் ஒரு அரக்கி இவர் ஒரு ராக்ஷஷி என்று சொல்லலாம். அந்த அளவு தனது அற்புதமான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்திய இவர் தெலுங்கு படங்களில் செமத்தியான கேரக்டர்களில் யாரும் நினைத்து பாராத அளவு நடித்தவர் என சுஹாசினி பானுப்ரியாவை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
அத்தோடு இவரது நடிப்பை கோபுர வாசலிலே, சத்ரியன், பிரம்மா, தைப்பூசம், பரதன், சுந்தர காண்டம், அமரன், காவியத்தலைவன் போன்ற படங்களில் நீங்கள் பார்த்தால் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மேடையில் வெளுத்து வாங்கிய சுஹாசினி..
எல்லாவிதமான கேரக்டர் ரோல்களையும் உள்வாங்கி பக்குவமாக நடிக்கக்கூடிய இந்த நடிப்பு ராக்ஷஷி பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். இதனை அடுத்து இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
எனினும் மண வாழ்வு சரியாக அமையாததன் காரணத்தால் தன் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் இவர் தற்போது மறதி நோயால் பாதிக்கப்பட்ட இருப்பதோடு சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..
மேலும் பானுப்பிரியாவின் திறமையை பற்றி மேடையில் பேசிய நடிகை சுஹாசினி இவரைப் போல் ஒரு நடிகையை கற்பனை செய்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு திறமைசாலியாக இருக்கிறார் என்று கூறிய பேச்சை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் பானுப்பிரியாவின் ரசிகர்கள் சுஹாசினியின் புகழ்ச்சியை கேட்டு பானுப்ரியா உண்மையிலேயே மிகச் சிறந்த கலைஞர் என்பதை அவர்களது பாணியில் கூறி வருவதோடு இந்த பேச்சை தற்போது வைரலாக மாற்றிவிட்டார்கள்.
இதனால் இந்த பேச்சானது தற்போது காட்டு தீ போல பரவி வருவதோடு அவர் ஒரு அரக்கி.. ராக்ஷஷி.. என பானுப்ரியாவை மேடையில் படு நேர்த்தியாக சித்தரித்து புகழ்ந்து தள்ளிய சுஷாசினியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.