ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. கொள்ளை அழகில்.. லைக்குகளை அள்ளும் சுஜிதா..!

தமிழில் சின்னத்திரை என்று ஒன்று உருவான காலம் முதலே சீரியலில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. 1983 இல் பிறந்த சுஜிதா இளம் வயதிலேயே சீரியலில் நடிப்பதற்கு வந்துவிட்டார். தன்னுடைய 17ஆவது வயதிலேயே முதல் சீரியலில் நடிக்க துவங்கி விட்டார் சுஜிதா.

தூர்தர்ஷன் சேனலில்தான் முதன்முதலாக சீரியல் என்கிற விஷயமே வந்தது. தூர்தர்ஷன் சேனல் ஒளிபரப்பாகி கொண்டிருந்த காலகட்டங்களில் எந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருக்கவில்லை. அதனால் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு டிவி சேனல் பொதிகை சேனல் மட்டும்தான் என்கிற நிலை இருந்தது.

அப்பொழுது அந்த சேனலில் ஒரு பெண்ணின் கதை என்னும் சீரியலில் நடித்தார் சுஜிதா. பொதிகை சேனலில் சீரியல்களில் நடித்து இப்பொழுது வரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்னத்திரை நடிகைகள் மிக அரிதாகதான் இருக்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சியில் வாய்ப்பு:

அதில் சுஜிதாவும் ஒருவர். பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு ராஜ் டிவியில் ஒளிபரப்பான கங்கா யமுனா சரஸ்வதி நாடகத்தில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமானார் சுஜிதா.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வர துவங்கியது. தொடர்ந்து விஜய் டிவியில் உறவுகள் சீரியலிலும் நடித்தார். இதற்கு நடுவே மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் எந்த அளவிற்கு சுஜிதா பிரபலமான நடிகையாக இருக்கிறாரோ அதே அளவு மலையாளத்திலும் பிரபலமான நடிகை ஆவார்.

மலையாளத்திலும் எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்திருக்கிறார் சுஜிதா தமிழில் சொல்லப்போனால் பிரபலமாக இருக்கும் முக்கால்வாசி சேனல்களில் தொடரில் நடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவி, மெகா டிவி என்று நிறைய சேனல்களில் சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பிரபலம்:

தற்சமயம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி என்கிற சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இதற்கு நடுவே விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் சுஜிதா. இந்த நிகழ்ச்சிகள் மூலமாகதான் இப்போதைய தலைமுறை மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக சுஜிதா மாறினார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் முக்கிய போட்டியாளராக சுஜிதா இருந்து வருகிறார். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை அவருக்காகவே பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுஜிதா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிக கவர்ச்சி இல்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை ஆகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version