சிவகுமாரின் இன்னொரு பக்கம்.. இப்படி பட்ட ஆளா இவரு.. முகத்திரையை கிழித்த நடிகை ..

தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த காலத்திலேயே அதிக அளவு பெண் ரசிகர்களை பெற்ற இவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேடைப் பேச்சாளரான இவர் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் காசிகவுண்டன் புதூர் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் 1960 -களில் இருந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நடிகர் சிவக்குமார்..

நடிகர் சிவகுமாரை பொறுத்த வரை 1965-ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் 1966-இல் மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் 1967 -இல் கந்தன் கருணை, காவல்காரன், கண்கண்ட தெய்வம் போன்ற படத்தில் நடித்த இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அன்னக்கிளி, உறவு சொல்ல ஒருவன், பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, ஆட்டுக்கார அலமேலு, கண்ணன் ஒரு கைக்குழந்தை ,மச்சானை பாத்திங்களா ,ரோஜாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தாய் மூகாம்பிகை, நிலவு சுடுவதில்லை, பௌர்ணமி அலைகள், கற்பூர தீபம், மீண்டும் பராசக்தி, யாரோ எழுதிய கவிதை, பாடாத தேனீக்கள் போன்ற படங்கள் இன்றளவும் பெயர் சொல்லக் கூடிய வகையில் உள்ளது.

மேலும் இவர் 2015-ஆம் ஆண்டு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் தனது மருமகளோடு இணைந்து நடித்திருக்கிறார். இதை அடுத்து கம்பராமாயண சொற்பொழிவுகளை செய்து வரக்கூடிய இவரை பற்றி திரையுலகில் ஒரு நல்ல பெயர் இருந்தது.

சிவகுமாரின் இன்னொரு பக்கம்.. இப்படி பட்ட ஆளா இவரு..

இத்தனை நாள் திரை உலகத்தில் சேர்த்து வைத்திருந்த இவரது பெயரை டேமேஜ் செய்யக்கூடிய வகையில் தற்போது சிவகுமாரின் இன்னொரு பக்கம் இவர் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? என்ற ரீதியில் சில விஷயங்களை நடிகை சுலக்சனா பகிர்ந்திருக்கிறார்.

இவரும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவரும் நடிகர் சிவகுமார் இணைந்து பல படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சுலக்சனா நடிகர் சிவகுமார் தன்னை எப்படி எல்லாம் நடத்தினார் என்பது பற்றி விரிவாக பேசிய விஷயம் தற்போது விவகாரமாக வெளியே வந்துள்ளது.

அப்படி என்னதான் சிவகுமார் செய்தார்..

நடிகர் சிவகுமாருடன் இணைந்து சுலக்சனா நாலு படங்களில் நடித்திருக்கிறார். இதில் இன்று நீ நாளை நான், சிந்து பைரவி உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை இருவருக்குமே பெற்றுத்தந்து மக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக ரீச் ஆக வைத்தது.

மேலும் சிவகுமார் தன்னை எப்போது பார்த்தாலும் தத்தி என்றும் பண்ணாட இங்க வா என்று செல்லமாக திட்டுவார். அப்படி என்னை மட்டும் இவர் அழைப்பது ஏன் என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை.

எனினும் மாற்ற நடிகர்களை விட நாம் அதிகம் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தான் சினிமா துறையில் அதிக அளவு இருப்பார்கள். ஆனால் இவர் அனைவருக்கும் வசனத்தை நல்ல முறையில் சொல்லிக் கொடுத்து நல்ல நடிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்துவார் என்று சுலக்சனா அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version