அடுத்து டும்..டும்.. தான் நிச்சயம் முடிந்த கையோடு துபாயில் அவுட்டிங்!! சுனைனா வெளியிட்ட வைரல் வீடியோ..

தென்னிந்திய திரைப்பட நடிகை சுனைனா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

ஆரம்பத்தில் இவர் 2006-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சம்திங் ஸ்பெஷல் என்ற திரைப்படத்திலும் 10வது கிளாஸ் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனை அடுத்து மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை சுனைனா..

மலையாள படத்தில் நடித்ததை அடுத்து இவர் 2007-ஆம் ஆண்டு மிஸ்ஸிங் என்ற தெலுங்கு படத்தில் நடித்த இதன் பிறகு தான் தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த நிலையில் வம்சம் படத்தில் 2010-ஆம் ஆண்டு நடித்த இவர் 2012-இல் பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்து முடித்தார்.

ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதோடு தமிழில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை செய்த இவர் 2013-இல் சமர் படத்தில் நடித்ததை அடுத்து கதிர்வேலன், தெனாலிராமன், வன்மம் உள்ளிட்ட பட படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்து டும்..டும்.. தான் நிச்சயம் முடிந்த கையோடு துபாயில்..

மேலும் நடிகை சுனைனா மற்ற நடிகைகளை போலவே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து சுனைனா சமீபத்தில் நெருக்கமாக சில நடிகர்களோடு சில காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக்கிங் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இவரைப் பற்றி பல்வேறு வகைகள் கிசு கிசுக்கள் இணையம் எங்கும் எழுந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. எனினும் அவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல் தன் வழி தனி வழி என்று சென்று கொண்டு இருந்தார்.

இப்போது இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் சில மாதங்களுக்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி காதலனுடன் மோதிரம் மாற்றிய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது காதலனோடு துபாயில் சுற்றிவரும் இவர் இவரது காதலர் பிரபல youtuber கலீல் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

சுனைனா வெளியிட்ட வைரல் வீடியோ..

இதனை அடுத்து தற்போது தனது காதலனுடன் துபாய்க்கு சென்று இருக்கும் சுனைனா அங்கு தன் காதலோடு சுற்றித்திரிந்த புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்.

இப்போது இந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் நிலவினை காட்டி இவர்கள் என்ன பேசி வருகிறார்கள் என்பதை பூடகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அழகான அந்த வட்ட நிலவை சுனைனாவும் அவர் காதலரும் பார்த்தது போல நீங்களும் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version