துபாய் மன்னர் பரம்பரை..! பெரும் கோடீஸ்வரன்..! சுனைனாவை காதலிக்க இது தான் காரணமாம்..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான நடிகை சுனைனா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-இல் மகாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூரில் பிறந்தவர்.

நாக்பூரில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர் வர்த்தகத்தில் இளங் கலை படிப்பை படிப்பதற்காக ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை சுனைனா..

அந்த வகையில் இவர் 2006-ஆம் ஆண்டு முதல் முதலாக சம்திங் ஸ்பெஷல் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதனை அடுத்து அதே ஆண்டு 10 கிலாஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்த இவருக்கு மலையாள படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பெஸ்ட் பிரெண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்து இவர் ஃபேமஸானார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் மிஸ்ஸிங் என்ற தெலுங்கு படத்தில் நடித்த இவருக்கு 2008 -ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் மீரா கேரக்டரை செய்திருக்கிறார். இந்த படத்தில் இவரோடு தேவயானியின்  தம்பி நகுல் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம் பிடித்த நாக்கு முக்கா என்ற கானா பாடல் ஆனது தமிழகத்தில் இருக்கும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து பிரபலமானதை அடுத்து பலரும் அறியக்கூடிய பிரபல நடிகைகளின் ஒருவராக இவர் மாறினார்.

இதனைத் தொடர்ந்து வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர் பறவை, சமர், கதிர்வேலன், தெனாலிராமன், வன்மம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சில நாட்களாகவே நடிகை சுனைனாவின் திருமணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அது குறித்த பதிவை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

துபாய் மன்னர் பரம்பரை..

நடிகை சுனைனா துபாயைச் சேர்ந்த செல்வந்தரான காலித் அல் அமெரியுடன் நிச்சயதார்த்தம் என்பது போன்ற வகைகளில் ஊடகங்களில் செய்திகள் வைரலாக பரவியது.

அடுத்து இது நிமித்தமாக Instagram பக்கத்தில் நிச்சயதார்த்த பதிவையும் பதிந்திருக்கிறார்கள். ஜூன் 5-ஆம் தேதி பூட்டு இமோஜி உடன் இரண்டு கைகளையும் ஒருவர் பிடித்தபடி பதிவிட்டு பதிவானது வைரலானது.

மேலும் இவரது வருங்கால கணவர் பற்றி எதுவும் தெரிவிக்காத நிலையில் இவரது இடுக்கையை துபாய் செல்வந்தர் காலித் அல் அமெரி விரும்பி இருக்கிறார். அவர் அணிந்திருந்த வைர மோதிரத்தில் அல்ஹம்துலில்லாஹ் என்று எழுதி இருந்தார்.

இவர் youtubeபராக திகழ்வதோடு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்தவர். நடிகை சுனைனாவை வெறிகொண்டு காதலிக்க கூடிய இவர் துபாய் மன்னர் வகையறா என்பது கூடுதல் சிறப்பான தகவலாகும்.

கோடீஸ்வரர் சுனைனாவை காதலிக்க காரணம்..

மேலும் தற்போது தான் உணவுகளை ரிவ்யூ செய்து வீடியோ போட்டு வரும் இவர் ஆரம்ப காலத்திலேயே பல சாகசங்களை செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இப்ரான் வீட்டு திருமணத்திற்கு கூட வந்திருக்கிறார் இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சுனைனாவின் மீது காதல் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விரைவில் இவரது திருமணம் நடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து பிரபலங்கள் ரசிகர்கள் சமூக தளவாசிகள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை இருவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version