இதை மன்னிக்கவே மாட்டேன்.. சுனைனா காலித் அல் அமிரி திருமணம்.. கதறும் முதல் மனைவி சல்மா..!

தமிழ், மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை சுனைனா இந்தியாவில் இருக்கும் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவர் இந்த படத்தில் நாக்கு மூக்கு பாடலுக்கு போட்ட குத்தாட்டத்தை பார்த்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

நடிகை சுனைனா..

நடிகை சுனைனாவை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சம்திங் ஸ்பெஷல் படத்திலும் 10-வது கிளாஸ் படத்திலும் நடித்து அசத்தியதை அடுத்து மலையாள படமான பெஸ்ட் பிரின்ஸில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை காதலில் விழுந்தேன், வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர் தெனாலிராமன், வன்மம் போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பிடியில் வைத்துக் கொண்டவர்.

தற்போது இணையதளங்களில் சுனைனாவின் திருமணம் பற்றி வெகுவாக கருத்துக்கள் வெளி வருகிறது. அதுவும் இது ஒரு காதல் திருமணம் துபாயில் இருக்கும் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் தான் அந்த நபர் என்ற செய்திகள் அதிகளவு கசிந்து வருகிறது.

சுனைனா காலித் அல் அமிரி திருமணம்..

அத்தோடு இந்த நபர் ஒரு பிரபல யூட்யூபராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு youtubeரான இப்ரான் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு நடிகை சுனைனாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பது போல செய்திகள் புதைந்த வண்ணம் உள்ளது.

அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்வது போல் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருப்பதோடு விரைவில் திருமணம் என்று சொல்லி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கதறும் முதல் மனைவி சல்மா..

இந்த சூழ்நிலையில் இவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவரது முதல் மனைவி சல்மா அவரைப் பற்றி பேசும் போது தான் இப்போது நிம்மதியாக இருப்பதாக சொல்லி இருப்பதோடு ஏதோ ஒரு வகையில் அவர் பற்றிய நினைவுகள் தனக்கு உள்ளது என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.

மேலும் இவர்களது இரண்டாவது திருமணத்தை முற்றிலும் வெறுக்கக்கூடிய அவர் தனக்கு தீங்கு செய்தவர்கள் ஒருபோதும் வாழ மாட்டார்கள் என்பது போன்ற கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு சல்மா தனது இரண்டு குழந்தைகளை அவர் தான் கவனித்து வருகிறார். மேலும் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தாரையும் திருமணத்துக்கு பிறகு கணவரையும் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. இதனை அடுத்து தற்போது தான் தன் குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு சீரும் சிறப்புமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

எனினும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? இல்லையா? என்பது பற்றிய உறுதியான தகவல்களை இருவருமே வெளியிடாததை அடுத்து இணையங்களில் இது போன்ற விஷயங்கள் காட்டுத் தீயாய் பரவி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே விரைவில் இது பற்றிய உண்மை நிலையை இருவரில் எவரேனும் ஒருவர் சொல்ல மாட்டார்களா? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் காத்திருப்புக்கு ஏற்றபடி பதில் கிடைக்குமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version