பிரபல நடிகை தபூ தற்போது 51 வயது தாண்டி இருக்கிறார். ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழை விடவும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டவரிடம் இதுவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. உங்களுக்கு வயது 51 ஆகிறது 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது என்னை ஒரு நடிகர் காதலித்தார் என்னையே திருமணம் செய்து கொள்வதாக கூறினார். திடீரென வேறொரு நடிகை திருமணம் செய்து கொண்டு அவருடைய வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை மறந்து விட்டு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் என்னால் அவரை மறக்க முடியவில்லை. அதனால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.
தற்போது அந்த நடிகருக்கு திருமணம் ஆகிவிட்டது குடும்பம் குழந்தை மற்றும் சமூகத்தில் ஒரு மதிப்பு என இருக்கிறது. எங்களுக்குள் நடந்த சில விஷயங்களை நான் வெளியில் கூறினால்.. அது அவரை மட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தையும் பாதிக்கும்.
இறுதியாக அது இருவருக்குமே பிரச்சனையாக போய் முடியும் இருவரின் நிம்மதியும் பறிபோகும். எனவே, என்னுடைய வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
அவராவது நிம்மதியாக இருக்கட்டும். எனவே இது குறித்து மேலே எதுவும் பேச வேண்டாம் என வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை தபு.
நடிகை தபு குறிப்பிட்டு சொன்ன அந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் நடிகை சமந்தாவின் முன்னாள் மாமனாரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனா தான்.
நடிகை தபுவும் நாகார்ஜுனாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் நாகர்ஜுனா திடீரென நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமடைந்து போன நடிகை தபு இது நாள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary in English : Actress Tabu recently revealed the reason why she has never married. She explained that for her, marriage was not just about finding a partner but also about being financially secure and having a strong emotional connection with someone.