படுக்கயறை… ரொமான்ஸ்.. காட்சிகளில் நடிக்கும் போது இப்படித்தான் இருக்கும்.. தமன்னா ஓப்பன் டாக்..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

அண்மையில் கூட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் திரைப்படத்தில் நடனமாடி இளசுகளின் மனதை ஆட வைத்தார். இதனை அடுத்து தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடிகை தமன்னா..

நடிகை தமன்னா தமிழ் மொழி திரைப்படத்திலும் நம்பர் ஒன் நடிகையாக வவம் வந்தவர். இவர் தற்போது பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்தில் பெரிய அளவு வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் கல்லூரி படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என பல முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் அக்கட தேசத்திலும் தனது பெயரை அற்புதமாக பதிவு செய்தார்.

புதுமுக நடிகைகளின் வரத்து அதிகரித்ததை அடுத்து தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து தெலுங்கு ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கக் கூடிய இவர் ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

படுக்கையறை ரொமான்ஸ் காட்சிகளில்..

இதனை அடுத்து தற்போது சுந்தர் சி இயக்க தமன்னா நடிப்பில் வெளி வந்திருக்கும் அரண்மனை 4 இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

பேயாக நடித்ததில் அவரது நடிப்பின் முதிர்ச்சி சூப்பராக இருந்ததாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளி வந்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து தமிழில் புதிய பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படுக்கையறை காட்சிகள் நடிப்பது குறித்து நடிகை தமன்னா ஓப்பனாக பேசியிருக்கும் விவகாரமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து அண்மை பேட்டி ஒன்றில் அவர் பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது என சொல்லலாம்.

நடிக்கும் போது இப்படி தான்..

மேலும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிக அளவு விரும்புவதில்லை மாறாக நடிகையை விட நடிகர்களுக்கு தான் பதட்டமாகவும், சங்கடமாகவும் இது போன்ற காட்சிகளில் நடிக்க இருக்கும் இதை நான் பல நடிகர்களிடம் பார்த்து இருக்கிறேன்.

அத்தோடு இது போன்ற காட்சிகளில் நடிக்கும் போது தங்களைப் பற்றி பெண் நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்று தான் கவலைப்படுவார்கள்.

இது விசித்திரமாக தான் உங்களுக்கு தோன்றும். நடிகர்கள் மனதில் தான் பல கேள்விகள் இருக்கும் என்று ஓபனாக சொன்ன பேட்டியை அடுத்து ரசிகர்கள் வாய் அடைத்துப் போனார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படும் விஷயமாக உள்ளதோடு பேசும் பொருளாக மாறி இருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version