ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதை பண்ணிடுவேன்.. நடிகை வைஷ்ணவி அருள்மொழி!..

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை வெளியிடும் டிவி சேனல்களாக விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் டிவி ஆகிய மூன்று சேனல்கள்தான் இருந்து வருகின்றன.

அதற்கு ஏற்றார் போல நடிகைகளுக்குள்ளும் போட்டிகள் இருந்து வருகின்றன. பொதுவாக விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்து அவர் சன் டிவிக்கு சென்று விட்டாலும் மீண்டும் விஜய் டிவி அவருக்கு நாடகங்களில் வாய்ப்பு கொடுப்பதில் சிக்கல்கள் இருக்கும்.

விஜய் டிவி நடிகை:

சீரியல் ரீதியாக இருக்கும் இந்த போட்டிகள் காரணமாக நடிகைகள் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. விஜய் டிவியை பொறுத்தவரை விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஒரு நடிகைக்கு தொடர்ந்து விஜய் டிவியே அங்கீகாரத்தை பெற்று கொடுக்கும்.

ஏனெனில் விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்த பிரபலமடையும் சீரியல் நடிகைகளை நடிக்க வைத்து அதன் மூலமாக அவர்களை மேலும் பிரபலம் ஆக்கிவிடும் விஜய் டிவி.

இதனால்தான் விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நடிக்க செல்வது கிடையாது. ஆனால் நடிகை வைஷ்ணவியை பொறுத்தவரை ஆரம்பத்தில் மட்டும்தான் விஜய் டிவி சீரியலில் நடித்து வந்தார்.

ரொமான்ஸ் காட்சி குறித்து ஓப்பன் டாக்:

நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற ஒரு சீரியலில் இவர் நடித்து வந்தார் அந்த சீரியலில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பேரன்பு சீரியலில் தற்சமயம் நடித்து வருகிறார் பேரன்பும் அதிக வரவேற்பு பெற்ற சீரியல்தான் என்றாலும் ஜீ தமிழுக்கு சென்ற காரணத்தினால் தற்சமயம் விஜய் டிவியில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

வைஷ்ணவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் பொழுது அவரது நடிப்பு அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். அதை அவர் கூறும் பொழுது நாடகங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எப்படி இருக்கும் என்பதை பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் எனக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் வெங்கடேசன் ஒரு நல்ல மனிதர். அவரை நான் தோஸ்த் என்றுதான் எப்போதும் அழைப்பேன் எங்களுக்கு இடையே எடுக்கப்படும் ரொமான்ஸ் காட்சி முடிந்த உடனேயே நான் பயங்கரமாக சிரிப்பேன்.

அதன் பின் அவரிடம் உங்க கூட நடிக்கும் போது ரொமான்ஸ் வரலை என்று சொல்லுவேன் அதற்கு அவர் நான் உன் கூட ரொமான்ஸ் பண்றதே பெரிய விஷயம் என்று கூறுவார் என கூறியுள்ளார் வைஸ்ணவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version