நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? தோல் நிற உடையில் வந்தனா மைக்கேல்..!

முன்பெல்லாம் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாக தெரிய மாட்டார்கள். ஆனால் இப்பொழுது சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக பல நடிகைகள் மக்கள் மத்தியில் தங்களை மிக எளிதாக பிரபலப்படுத்திக் கொள்கின்றனர். அப்படி சின்னத்திரை நடிகையாக இருந்தும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வந்தனா மைக்கேல்.

ஆனந்தம் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலமாக முதன் முதலாக அறிமுகமானார் நடிகை வந்தனா. அந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக வில்லி கதாபாத்திரம் அவ்வளவாக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக இருக்கும்.

வில்லி தோற்றத்தில் வாய்ப்பு:

ஆனால் இந்த சீரியலில் அவர் வில்லியாக நடித்திருந்தாலும் கூட மக்கள் விரும்பும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து ஆனந்தம் சீரியலுக்குப் பிறகு அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வரத் துவங்கின. அதன்பிறகு தங்கம் சீரியலில் வில்லியாக அவர் நடித்தார்.

தங்கம் சீரியல் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து கிடைத்த சீரியல்கள் அனைத்திலும் அவர் வில்லியாகதான் நடித்து வந்தார். அதற்கு பிறகு காதல் முதல் கல்யாணம் வரை, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் வந்தனா.

ஆனால் உண்மையில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எதிர்மறையான ஆளாக இருப்பார் என்று கூறப்படுகிறது. நிஜத்தில் அவரிடம் பேசுபவர் எவரும் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்று ஆச்சரியமாக கேட்பார்களாம்.

நிஜ வாழ்க்கையில் வந்தனா:

அந்த அளவிற்கு மிகவும் சாதுவானவர் வந்தனா மைக்கல் என்று கூறுகின்றனர். இவர் நலனும் நந்தினியும் என்னும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரை என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கூட இவர் கலந்து கொண்டு வந்துள்ளார். கொரோனாவிற்கு முன்பு கொஞ்சம் உடல் எடையுடன் இருந்த வந்தனா கொரோனா காலங்களில் தனது உடல் எடையை குறைத்து கிட்டத்தட்ட சினிமா நடிகை போன்ற தோற்றத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்.

ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமாக இருப்பதற்காக பல விதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வந்தனா அந்த வகையில் தற்சமயம் தோல் நிறத்தில் ஆடை அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம்தான் அதிகமாக டிரெண்டிங்  ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version