வயசு பசங்க பாவம்.. ஹாலிவுட் லெவல் கிளாமரில் இறங்கி கலக்கும் வாணி போஜன்..!

சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரை மூலமாக நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்திருக்கின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை மிக சிலரே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருகின்றனர்.

அதிலும் கதாநாயகியாக நடிப்பவர்கள் மிகச் சிலரே என்று கூறலாம். அந்த வகையில் நடிகை வாணி போஜன் முக்கியமான ஒரு நடிகை ஆவார். நடிகை வாணி போஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஊட்டியில் தனது படிப்பை முடித்த பிறகு ஏர் ஹோஸ்டர்ஸாக வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.

விமானப்பணி:

நடிப்பின் மீது அவருக்கு எந்த ஆர்வமும் அப்போது இருக்கவில்லை. இந்த நிலையில் ஆரம்பத்தில் கிங்பிஷர், இண்டிகோ மாதிரியான விமானங்களில் ஏர் ஹோஸ்டர்ஸாக பணிபுரிந்து வந்தார் நடிகை வாணி போஜன். இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாகதான் இவருக்கு மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைத்தது.

மாடலிங் துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலமாக சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் வாணி போஜன். அதில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தை பெற்றார். பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

2010 ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு என்கிற ஹாரர் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு நாடகங்களில் இவர் அதிக வாய்ப்பை பெற்றார். முக்கியமாக 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான தெய்வமகள் சீரியல் இவருக்கு அதிக வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

சீரியலில் வாய்ப்பு:

தெய்வமகள் சீரியல் பல ஆண்டுகள் வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பான தொடராகும். அதில் கதாநாயகியாக வாணி போஜன்தான் நடித்திருந்தார். அதன் மூலம் அதிக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் வாணி போஜன்.

அதற்குப் பிறகு அவருக்கு லட்சுமி வந்தாச்சு என்கிற சீரியலிலும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடிக்க துவங்கிய வாணி போஜன் தொடர்ந்து அதே சமயம் சினிமாவின் மீதும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில்தான் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் கதாநாயகிக்கு அடுத்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் வாணி போஜன். அந்த கதாபாத்திரம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்சமயம் தமிழில் நிறைய திரைப்படங்களில் வாணி போஜன் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே மூன்று படங்களில் தற்சமயம் நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக வாணி போஜனும் கவர்ச்சி பக்கம் செல்கிறார் என்று இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version