இவரை கல்யாணம் பண்ண காரணம் இது தான்..? வரலட்சுமி சொன்ன காரணத்தை கேளுங்க..!

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக விளங்கும் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

திரை உலகில் போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தார தப்பட்டை படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

நடிகை வரலட்சுமி..

இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் போதிய அளவு இல்லாத காரணத்தால் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து வரக்கூடிய இவர் அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலை திருமணம் செய்து கொள்வதற்கு உரிய நிச்சயதார்த்தத்தை செய்திருந்தார்.

தன் குடும்பத்தாரோடும் உறவினர்களோடும் நடந்து முடிந்த இந்த நிச்சயதார்த்தத்தை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இவர் திருமணம் செய்து கொள்ளும் நபர் பற்றி வெளி வந்தது.

அதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் நடிகை வரலட்சுமி நிக்கோலாய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவருக்கு 15 வயதில் மகள் ஒருத்தி இருப்பதாகவும் சொன்ன விஷயம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நிக்கோலை திருமணம் செய்ய காரணம்..

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் காதல் செய்த நிக்கோலை கரம் பிடிக்க இருக்கும் சந்தோஷத்தில் இருவரும் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு இளசுகளை ஏங்க விட்டார்கள்.

இதனை அடுத்து பல ரசிகர்கள் நடிகை வரலட்சுமி பணத்துக்காக தான் நிக்கோலை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையங்களில் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளி வந்தது.

இதனை அடுத்து நடிகை வரலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்று இந்த பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பேசி இருப்பது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஓபன் ஆக சொன்ன நடிகை வரலட்சுமி..

அந்த வகையில் அவர் பேசும் போது தன்னை பற்றி நெகட்டிவ் ஆக இணையத்தில் பரவும் கருத்துக்களை பற்றி கண்டு கொள்வதே கிடையாது.
மேலும் நான் தற்போது சந்தோஷமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அத்துடன் கஷ்டப்பட்டு உழைத்து என் வருமானத்தில் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

ஆனால் பலரும் நிக்கோலை நான் திருமணம் செய்து கொள்வது பணத்திற்காக என்று சொல்லுகிறார்கள். அந்தப் பணம் என்னிடம் அதிக அளவு உள்ளது.
பணத்திற்காக இன்னொரு வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கு எப்போதும் ஏற்பட்டது இல்லை.

எனவே என்னைப் பற்றி தவறாக சித்தரித்து கற்பனையில் பேசி வருபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எனினும் அவர்கள் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற விதத்தில் நான் தற்போது உண்மையைச் சொல்கிறேன்.

நிக்கோலை நான் 16 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து இருந்தேன். மேலும் நட்பு ரீதியாக நாங்கள் இருவரும் பேசி இருக்கிறோம். அப்போது அவருடைய மனைவியோடு வாழ்ந்து வந்தார். இதனால் எங்களுக்குள் எந்த ஒரு நெருக்கமும் ஏற்பட்டது கிடையாது.

இதனை அடுத்து அவர் மனைவியை பிரிந்த பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன் அவருடைய பாசம் என் ப்ரொபஷனல் மீது அவருக்கு இருக்கும் அக்கறை எல்லாவற்றையும் பார்த்து தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது.

அது மட்டுமல்லாமல் அவர் என் அப்பா, அம்மாவை நேரில் சந்தித்து அவருக்கு இருக்கும் காதலை சொல்லி இருக்கிறார். அதன் பிறகு நார்வைக்கு ஃபேமிலி டூர் சென்று இருந்தோம். அங்கு வைத்துத் தான் அப்பா அம்மா முன்னாடி நிக்கோலாய் தன் காதலை சொன்னார்.

எனவே எனக்கு பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என் அப்பாவை போன்று அன்போடு இவரும் இருப்பதால் தான் நான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பேட்டியில் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version