இதை கழுவிவிட கூட நான் ரெடி.. செத்து போயிடலாம்னு தோணுது.. ஷகிலாவிடம் காதறிய

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை வாசுகி தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டர் ரோல்களை செய்து அசத்தியதோடு பலரையும் சிரிக்க வைத்தவர்.

இவர் தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் ஒரு பல காமெடி ரோல்களை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் அவர் ஷகிலா அக்கா உடன் கலந்து பேசிய பேச்சுக்கள் வைரலாகி உள்ளது.

நடிகை வாசுகி..

நடிகை வாசுகி இந்த பேட்டியின் போது மீண்டும் மடி பிச்சை கேட்கிறேன்.மேலும் வறுமையில் வாடுகின்ற என்னுடைய நிலையை போக்க கட்டாயம் நடிகர் சங்கம் உதவி செய்ய வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.

மேலும் குண சித்திர வேடங்களில் நடித்து அசத்தியிருக்கும் இவர் தற்போது உணவுக்கே வழியின்றி தவிப்பதாக சொல்லி இருப்பது கடுமையான அதிர்வடைகளை ஏற்படுத்தி உள்ளதோடு அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளருக்கு இந்த நிலையா? என்று கேட்க வைத்துவிட்டது.

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக விளங்கிய நடிகை வாசுகி ஜெயலலிதா அம்மாவின் மரணத்தை அடுத்து அரசியலிருந்து ஓரம் கட்டப்பட்டு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி விட்டார்.

அட கழுவி விட கூட நான் ரெடி..

இதனை அடுத்து ஒரு வேளை உணவுக்கே வழியின்றி கஷ்டப்பட்ட நிலையில் கையில் வைத்திருந்த நகைகளை விற்று காலத்தை ஓட்டியதாகவும் இதனை அடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு ஓரளவு உதவிகளை செய்ததாகக் கூறியிருக்கிறார்.

மேலும் கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதற்கு நிறைய பணம் செலவானதாகவும் இவர் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் இடம் கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன் என்று வாசுகி பேசி இருக்கிறார்.

செத்துப் போயிடலாம் தோணுது..

அது மட்டுமல்லாமல் என்னை போன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கூறிய இவர் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால் உள்ளிட்டோர் தனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லிவிட்டார்.

இப்போது எந்த ஒரு வேலையும் இல்லாத காரணத்தால் சாலைகளில் சுற்றி திரியும் எனக்கு உதவியை தயவு செய்து செய்யுங்கள். மீண்டும் மடி பிச்சை கேட்கிறேன் என்று கோரிக்கையை முன் வைத்து பேட்டியில் பேசி இருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு முன்னணி காமெடி நடிகையாக வலம் பெற வேண்டிய இவரது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று பலரும் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

அத்தோடு டாய்லெட் கழுவ கூட நான் ரெடியாகத்தான் இருக்கிறேன் ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் என்று அவர் கண்ணீர் மல்க கேட்டிருப்பது பலரது மனதையும் கரைக்கக் கூடிய வகையில் இருந்தது.

மேலும் எந்த ஒரு வேலையும் இல்லாததால் தற்போது தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு போய் விட்ட இவர் ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து தான் சாப்பிட்டு வருவதாகவும் தமிழ் திரையுலகம் இவருக்கு இன்று வரை எந்த உதவியும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version