மீண்டும் பொறுப்பெற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு இதை அனுப்பிடாதிங்க.. வித்யா பாலன் வீடியோ..!

2003 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை வித்யாபாலன். வித்யாபாலன் தமிழில் கூட ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவர் பல திரைப்படங்களில் ஆரம்பத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குரு திரைப்படத்தில் கூட மாதவனுக்கு இவர்தான் ஜோடியாக நடித்திருப்பார். சினிமாவில் வந்த ஆரம்ப காலகட்டங்களில் இவர் மிகவும் ஒல்லியாக கதாநாயகிக்கு உள்ள தன்மையுடன் இருந்தார்.

ஆனால் போகப் போக இவரது உடல் பருமன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. இருந்தாலும் பாலிவுட்டில் முக்கியமான திரைப்படங்களான ஓம் சாந்தி ஓம், பா மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வித்யாபாலன்.

வித்யாபாலன் அறிமுகம்:

பாலிவுட்டில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் அதிகமான ரசிக பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு சில நடிகைகளில் வித்யாபாலன் முக்கியமானவர் என்றுதான் கூற வேண்டும். 2003 ஆம் ஆண்டு நடிக்க துவங்கியது முதலே பெரிதாக கவர்ச்சியே இல்லாமல் நடித்து வந்தவர்தான் நடிகை வித்யா பாலன்.

அப்படிப்பட்டவர் 2011 ஆம் ஆண்டு நடித்த டர்ட்டி பிக்சர் என்கிற திரைப்படம் மொத்த பாலிவுட் சினிமாவையும் புரட்டி போட்டது என்றுதான் கூற வேண்டும்.  நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் மிக கவர்ச்சியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வித்யா பாலன்.

சினிமாவில் ட்ரெண்டான படம்:

அந்த திரைப்படம் நெருப்பு போல பாலிவுட்டில் பரவி வந்தது. அதனை தொடர்ந்து அப்பொழுது ஹிந்தி சினிமாவில் பெரிதாக பேசப்படும் ஒரு நடிகையாக மாறினார் நடிகை வித்யா பாலன்.

ஏனெனில் அதுவரை கவர்ச்சி என்பதே பெரிதாக சுத்தமாக காட்டாத ஒரு நடிகை முழுக்க முழுக்க ஒரு திரைப்படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடித்திருக்கிறார் என்னும் பொழுது அது ஒரு பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அரசியல் சார்ந்து பல விஷயங்களை பேசி வரும் வித்யா பாலன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று லட்சக்கணக்கான வீவ்களை பெற்று அதிக ட்ரெண்டாகி வந்தது.

அந்த வீடியோவில் ஒரு ஆண் அவருக்கு போன் செய்து என்னை எத்தனை சதவீதம் காதலிக்கிறாய் என்று கேட்பார். அதற்கு பதிலளிக்கும் வித்யா பாலன் நான் உங்களை 72% காதலிக்கிறேன் என்பார்.

ஏன் என்னை நீ 100 சதவீதம் காதலிப்பாய் என்று அல்லவா நினைத்தேன் என்று அந்த ஆண் கேட்கும் பொழுது மீதம் இருக்கும் 28% ஜி.எஸ்.டி என்று கூறி அரசியல் நகைச்சுவை ஒன்றை செய்திருப்பார் வித்யா பாலன். இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டசன்கள் இதை தற்சமயம் இருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்ணில் பட செய்து விடாதீர்கள் பிறகு ஜி.எஸ்.டி ஐ அவர் உயர்த்திவிடுவார் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version