இதை போட்டா மட்டும் புருஷன் இல்ல.. ஆனா.. சீரியல் நடிகை வித்யா வினு மோகன் தடாலடி..!

சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி நாடகம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா விணு மோகன். ஆரம்பத்தில் மலையாளத்தில் நடித்து வந்த வித்யா மோகன் பிறகு சின்னத்திரையை பொருத்தவரை தமிழில் அதிக வரவேற்பு இருப்பதை அறிந்து தொடர்ந்து தமிழ் சின்னத்திரை நாடகங்களில் பங்கேற்க துவங்கினார்.

அதனை தொடர்ந்து அவருக்கு சின்னத்திரை நாடகங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே மலையாளத்தில் வெக்கேஷன் என்கிற திரைப்படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகிவிட்டார் வித்யா மோகன்.

தமிழ் திரைப்பட அறிமுகம்:

அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி என்கிற படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன.

மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்கள் நடித்த பிறகுதான் சன் டிவியில் வள்ளி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வள்ளி சீரியல் 2013ல் துவங்கி 2019 வரை கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஒளிபரப்பானது.

அதில் 235 வது எபிசோடில் அறிமுகமான நடிகை வித்யா மோகன் 1961 வது எபிசோடு வரையிலும் அந்த நாடகத்தில் இருந்தார். அதுதான் அவருக்கு அதிகபட்ச வரவேற்பை தமிழில் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது.

பல வருடங்கள் நடித்த சீரியல்:

பிறகு 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான அபியும் நானும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குழந்தைகள் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சீரியலுக்கு சன் டிவியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அதனை தொடர்ந்து வித்யா மோகனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து சன் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்கு நடுவில் கேரளாவிலும் மலையாளத்தில் நிறைய நாடகங்களில் இவர் நடித்து வருகிறார்.

ஏனெனில் வித்யா மோகன் பிறந்த இடம் கேரளாவாகும். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது தாலி மட்டுமே கணவருக்கு கொடுக்கும் மரியாதை கிடையாது என்று கூறி இருக்கிறார். தாலியை அணிந்துவிட்டால் மட்டுமே ஒருவர் கணவர் என்று ஆகிவிடாது.

இந்த தாலியை அணியவில்லை என்றாலும் கூட அவர் எனக்கு கணவர்தான் அவர் மீது காட்டும் அன்பை வைத்து தான் எல்லாம் இருக்கிறது என்று கூறுகிறார் வித்யா மோகன். மேலும் அவர் கூறும்போது தாலியை அணிவது எனக்கு பிடித்த விஷயம். படப்பிடிப்பில் கூட அதை கழட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version