போதை பார்ட்டி.. சிக்கிய நடிகைகள் சோதனையில் பாசிட்டிவ்.. யாருன்னு பாருங்க..!

திரைப்படங்களில் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை பேசி நடித்துவிட்டு மிகவும் சமூக அக்கறை கொண்டவர்கள் போல வசங்களங்களை பேசும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் அப்படியே இருப்பது கிடையாது.

அதற்கு அப்படியே எதிர்மறையாக இருக்கிறார்கள். பொதுவாக நடிகர் நடிகைகளின் கலாச்சாரமே வேறு என பாடகி சுசித்ரா கூட சமீபத்திய பேட்டிகளில் பகிரங்கமான விஷயங்களை கூறி அதிர வைத்தார்.

திரைமறைவில் நடிகர்களின் வாழ்க்கை இது தான்:

குறிப்பாக நடிகர் நடிகைகளின் தகாத உறவுகள் , விவாகரத்து தவறான தவறான பழக்க வழக்கங்கள், போதை, குடிப்பழக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் ரகசிய விஷயங்கள் எல்லாம் அம்பலமாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பெங்களூரில் போதை பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த போதை பார்ட்டியில் ஐடி ஊழியர்கள், மாடல் அழகிகள் ,நடிகர் நடிகைகள், தெலுங்கு சினிமா பிரபலங்கள் கன்னட திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட எல்லோரும் கலந்து கொண்டு போதையில் இருந்துள்ளனர்.

தாங்கள் என்ன செய்கின்றோம் என்ற நினைவு கூட இல்லாமல் இருந்திருக்கிறார்கள். உடனடியாக இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வர அங்கு சென்று சோதனை நடத்தியதில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது வந்தது.

உடனடியாக ஒரு சில பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதை எடுத்து அந்த போதை பார்ட்டில் கலந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகையான ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி, நடிகை ஹேமா ஆகியோர் உடனடியாக மறுப்புக் கூறி அறிக்கை வெளியிட்டனர்.

பெங்களூரில் போதை பார்ட்டி:

இந்த நிலையில் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு துரிதமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதில் கிட்டத்தட்ட 59 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் போதை அருந்தியிருந்தது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் அவர்கள் அத்தனை பேரிடம் வழக்கு பாயும் என போலீசார் எச்சரித்திருக்கிறார்கள் .

அதுமட்டுமில்லாமல் போலீசார் அதிரடியாக நடத்திய அந்த சோதனையில் 14.4 கிராம் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள், 1.16 கிராம் எம்டிஎம்ஏ படிகங்கள் மற்றும் 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் ஐந்து கிராம் கொக்கைன், கொக்கைன் தடவப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், ஐந்து மொபைல் ஃபோன்கள், ஒரு வோக்ஸ்வோகன் கார் , ஒரு லேண்ட் ரோவர் கார் , டிஜே பயன்படுத்தும் ஆடியோ சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஃப் ஐ ஆர்’ல் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி பெரும் பரபரப்பாக சினிமா உலகத்தில் பேசப்பட்டு வருவதால் இன்னும் இதில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்களோ அத்தனை பேரும் மிகுந்த பயத்தில் நடுங்கி வருவதாக கூறப்படுகிறது .

இன்னும் இதில் பிரபலமான நடிகர் நடிகைகளின் பெயர்களும் அடிபட்டு வருவதாகவும், அவர்களும் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்பதால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே கதிகலங்கி போய் கிடக்கிறது.

பயத்தில் நடுங்கும் நட்சத்திரங்கள்:

சினிமாவில் நடித்துவிட்டு பல கோடியில் சம்பளம் வாங்கிக்கொண்டு தங்கள் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் போதைப் பழக்கத்திற்கும் தவறான உறவுகளுக்கும் அடிமையாகி கிடக்கும் நடிகர் நடிகைகளை தான் தற்போதுள்ள ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இது தான் இவர்களின் நிஜ வாழ்க்கை…. நிஜ முகம் என்று என்பதை அம்பலப்படுத்தும் விதமாக இந்த செய்திகள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நடிகர் நடிகைகளின் மீது ரசிகர்களுக்கு இருந்த நம்பிக்கையும் அவர்கள் மீது இருந்த மரியாதையும் குறைந்து போய்விட்டதாக தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version