வயசானாலும்.. அழகும்.. கவர்ச்சியும்.. கொஞ்சமும் குறையாத நடிகைகள்..!

நடிகைகளுக்கு முக்கியமான விஷயம் என்பதை அவர்களது முக அழகுதான் என்று கூறவேண்டும். ஏனெனில் ஒரு நடிகர் எப்படி இருந்தாலும் அவரது திரைப்படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள்.

அவர் உடல் பருமனாக இருந்தாலும் சரி ஒல்லியாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் அவர்களுக்கான மார்க்கெட் அதனால் குறைவதில்லை. ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் எவ்வளவு காலங்கள் வசீகரமாக இருக்கிறார்களோ அவ்வளவு காலங்கள் மட்டுமே அவர்கள் சினிமாவில் பயணிக்க முடியும் என்கிற நிலைமை இருக்கிறது.

மிஞ்சி மிஞ்சி போனால் 10 வருடங்கள் ஒரு நடிகை வசீகரமாக இருப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் சில நடிகைகள் இதற்கு விதிவிலக்காக வயதான பிறகும் கூட இளமையான தோற்றத்துடன் இருந்து வருகின்றனர்.

அதனால் அவர்களுக்கான ரசிக்கப்பட்டாளமும் குறையாமல் இருந்து வருகிறது. அப்படியான சில நடிகைகளைதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

நதியா:

இதில் முதலாவதாக இருப்பவர் நடிகை நதியா தமிழ் சினிமாவில் துவக்கத்தில் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தவர் நதியா. பெரிய கதாநாயகர்களோடு அவ்வளவாக இவர் திரைப்படங்களில் நடித்ததில்லை என்றாலும் கூட இவருக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்கதான் செய்கிறது.

தற்சமயம் 57 வயதை அடைந்திருக்கும் நதியாவை பார்த்து யாராவது அந்த வயதை கூறினால் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு இளமையாக இருந்து வருகிறார் நதியா

ரம்யா கிருஷ்ணன்:

படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பெரிதாக வரவேற்பை பெற்றார் ரம்யா கிருஷ்ணன். அதற்கு அடுத்த தலைமுறை நடிகரான சிம்புவுடன் சேர்ந்து குத்து டான்ஸ் ஆடுகிறார் என்றால் அவருக்கு எப்படி வயதாகாமல் இருக்கிறது என்பது பலருக்குமே ஆச்சரியமான விஷயம்தான்.

அதே சமயம் ராஜ மாதா சிவகாமி தேவியாகவும் நடிக்கிறார் ஆனால் மேக்கப் இல்லாமலே அவர் வயது குறைவாகதான் தெரிகிறார் இத்தனைக்கும் அவருக்கு தற்சமயம் அவருக்கு 52 வயது ஆகிறதாம்.

திரிஷா:

சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை 20 வருடங்களாக முகத்தில் எந்த விதமான மாற்றமும் தெரியாமல் இருக்கும் ஒரு நடிகை திரிஷா. 40 வயதை கடந்திருக்கும் திரிஷா இப்பொழுதும் கூட மிகவும் இளமையாகவே இருந்து வருகிறார். மீண்டும் தற்சமயம் கதாநாயகியாகவும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.

நயன்தாரா:

ஐயா திரைப்படத்திலிருந்து போன்று இப்போது முக அமைப்பு இல்லாவிட்டாலும் கூட அவருக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாகிக்கொண்டு 39 வயதை கடந்த பிறகும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் நடிகையாகவும் இவர்தான் இருக்கிறார்.

சினேகா:

திருமணம் ஆகி தற்சமயம் இரண்டு குழந்தைகளுடன் இருக்கின்ற சினேகா 42 வயதை கடந்த பிறகும் கூட இன்னமும் அழகு குறையாமல் அப்படியே இருந்து வருகிறார். தற்சமயம் விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சினேகா. இன்னமும் வசீகரம் குறையாமல் வசீகரா திரைப்படத்தில் இருந்த சினேகாவாகத்தான் இவர் தெரிகிறார்.

மஞ்சு வாரியர்:

வியக்கத்தகு வகையில் முகத்தில் சுத்தமாக வயதே தெரியாமல் இருந்து வரும் ஒரு நடிகை மஞ்சு வாரியர். 45 வயதை கடந்திருக்கும் மஞ்சு வாரியர் துணிவு திரைப்படத்தில் நடித்த பொழுது அவர் வயதை யாரிடம் கூறினாலும் நம்பி இருக்க மாட்டார்கள். அவ்வளவு இளமையான ஒரு தோற்றத்தோடு நடித்திருந்தார் அந்த வகையில் மலையாள சினிமாவில் வயது குறையாத நடிகை என்று மஞ்சு வாரியரை கூறலாம்.

ஜோதிகா:

நடிகை திரிஷா போலவே சினிமாவிற்கு வந்தது முதல் இப்போது வரை முகத்தில் எந்த மாற்றமுமே இல்லாமல் அப்படியே இளமை தோட்டத்தில் இருப்பவர் நடிகை ஜோதிகா. கிட்டத்தட்ட 45 வயதை கடந்த ஜோதிகாவிற்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. இருந்துமே கூட இன்னமும் ஒரு கதாநாயகி போலவே இருந்து வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam