Site icon Tamizhakam

ஒரே நடிகருக்கு ஜோடியாகவும்.. அம்மாவாகவும் நடித்த நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் முதலில் ஹீரோவுக்கு கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் பின்னாளில் அதே ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த கொடுமை எல்லாம் அரங்கேறி இருக்கிறது.

அதில் யார் யார் எந்த நடிகை என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த நடிகைகள்:

கல்கி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியாக நடித்தவர் தான் கீதா. இவர் சிவகாசி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஜெயபாரதி. அதே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார்.

அதே ஜெயபாரதி மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் கமலுக்கு அம்மாவாகவும், முத்து திரைப்படத்தில் ரஜினிக்கு அத்தையாவாகவும் நடித்திருப்பார்.

“அவர்கள்” திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுஜாதா பாபா திரைப்படத்தில். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அம்மாவாக நடித்திருந்தார்.

ஹீரோக்களுக்கு வயசே ஆகாது:

இப்படித்தான் சினிமாவை பொருத்தவரை ஹீரோயின்களுக்கு மட்டும்தான் வயதாகிறது. ஆனால் ஹீரோக்களுக்கு எப்போதுமே வயதாகாது.

70 வயதானாலும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.

நடிகைகளுக்கு மட்டும் ஏன் இது போன்ற கொடுமைகள் எல்லாம் சினிமாவில் நடக்கிறது? என கேள்வி கேட்டீர்கள் ஆனால் நடிகைகள் வயது ஆக ஆக அவர்களது இளமையும் அவரது தோற்றமும் முற்றிலுமாக மாறிவிடும்.

இளமை இருக்கும் வரை தான் ஹீரோயின்:

அவர்களுக்கு நல்ல அழகும் , இளமையும் இருக்கும் வரை தான் அவருக்கான மார்க்கெட் இருக்கும் ஒரு சில வருடத்திலேயே அவர்கள் வயதானவர்கள் ஆகிவிட்டால் அவர்கள் ஹீரோயின் பதிவிலிருந்து இறக்கப்பட்டுவிடுகிறார்கள்.

அதன் பின்னர் சைட் ஆக்ட்ரஸ் ஆக நடிக்கும் வாய்ப்புகள் தான் கிடைக்கும். ஹீரோயின்களும் வேற வழியில்லாமல் எப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் இருப்பவர்கள் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து விடுகிறார்கள்.

ஆனால், ஹீரோக்களுக்கு அப்படி நடப்பதே கிடையாது. ஒருமுறை நட்சத்திரம் நடிகர் என்ற அந்தஸ்தை தொட்டு விட்டால் அவர்கள் தொடர்ச்சியாக இளம் வயது ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடிப்பார்கள்.

அப்படித்தான் தற்போது 70 வயசு ஆன கமல்ஹாசன் தற்போது Thug Life திரைப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அப்படித்தான் ஹீரோக்களின் வாழ்க்கை சினிமாவில் இருந்து வருகிறது.

73 வயதாகும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் கூட 34 வயதாகும் தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனவே இது இப்போதும் நடக்கும் வழக்கமான விஷயமாகிவிட்டது.

Exit mobile version